அரசியல்ஆல்பம்:

05-Dec-2012
1 / 10
ம.தி.மு.க., வில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத்,அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
2 / 10
குஜராத் மாநில, சட்டசபை தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, ஆமதாபாத்தில், வெளியிடப்பட்டது. அதை, கட்சியின், மாநில தலைவர், அர்ஜுன் மதுவாடியா, டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித் காங்கிரஸ் எம்.பி., அசோக் தன்வார் ஆகியோர் வெளியிட்டனர்.
3 / 10
புதுடில்லியில் நடந்த பா.ஜ.க., பார்லிமென்ட் கூட்டத்தில், அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ‌ஜேட்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.
4 / 10
மேற்கு வங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தில் உள்ள ஆன்டாவில் நடந்த பேரணியில், ‌அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.
5 / 10
புதுடில்லியில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அஜித்சிங், பெட்ரோலியம் மற்றும் மத்திய இயற்கை எரிவாயுதுறை அமைச்சர் வீரப்ப மொய்லி இருவரும் சந்தித்து பேசினர்.
6 / 10
பாட்னாவில் உள்ள சட்டசபையில் வெளிநடப்பு செய்த முன்னாள் பீகார் முதல்வர் ராப்ரி தேவி மற்றும் ராஷ்டீரிய ஜனதாதள கட்சியின் ‌எம்.எல்.சி.கள்.
7 / 10
புதுடில்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்ட‌ே.
8 / 10
உமாபாரதிக்கு எதிரான அவதூறு வழக்கில், மத்திபிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள தலைமை நீ‌திமன்றத்திற்கு ஆஜராக வந்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்.
9 / 10
ஏழை மக்கள் கட்சி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால், புதுடில்லியில் ‌பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
10 / 10
சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீடு குறித்து, பார்லிமென்டில் நடந்த விவாதத்தின் போது, காங்கிரஸ் தலைவர் சோனியா, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் காரசாரமாக பேசினர்.
Advertisement