அரசியல்ஆல்பம்:

18-Dec-2012
1 / 10
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேச வந்த முதமைச்சர் ஜெயலலிதா. உடன் தலைமைச் செயலர், அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள்.
2 / 10
குஜராத் அகமதாபாத்தில் நடைபெற்ற பா.ஜ. கட்சி கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் நரேந்திர மோடி, எல்.கே.அத்வானி.
3 / 10
குஜராத் சட்டசபை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அகமதாபாத்திலுள்ள வாக்குசாவடியில் ஓட்டளித்த பா.ஜ. மூத்தத் தலைவர் அருண் ஜெட்லி.
4 / 10
டில்லி பார்லிமென்ட் குளிர்காலக் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், காங்கிரஸ் எம்.பி. ப்ரியா தத்.
5 / 10
டில்லி பார்லிமென்ட் குளிர்காலக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு திரும்பிய பா.ஜ. தலைவர் சுஷ்மா சுவராஜ்.
6 / 10
டில்லி பார்லிமென்ட் கூட்டத் தொடரில் பங்கேற்ற பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
7 / 10
கர்நாடக மாநிலம் ஹூப்ளில் தமது மனைவி மற்றும் ஆதரவாளர்களுடன் 58வது பிறந்தநாளை கொண்டாடிய முதல்வர் ஜெகதிஷ் ஷெட்டர்.
8 / 10
அசாம் கவுகாத்தியில் நடைபெற்ற ஆசியன் - இந்தியா கார் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் தருண் கோஹய், மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி.
9 / 10
சேத்தியாத்தோப்பில் நடந்த அ.தி.மு.க., கடலூர் மாவட்ட (மேற்கு) விவசாய பிரிவு கருத்தரங்கம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சம்பத் பேசினார்.
10 / 10
பா.ம.க., சார்பில் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் பேராட்டம் நடந்தது. போராட்டத்தை முன்னிட்டு என்.எஸ்.சி.போஸ் சாலையில் உள்ள மதுக்கடைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாரிமுனையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ராமதாஸ்.
Advertisement