அரசியல்ஆல்பம்:

23-Dec-2012
1 / 10
பூரண மதுவிலக்கு அமல்படுத்தகோரி, நடைபயணம் மேற்கொள்ளும் ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, விருதுநகர் வந்தார்.
2 / 10
புதுச்சேரி பற்றும் கரங்கள் சேவை அறக்கட்டளை சார்பில் ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்து வரும் வீட்டு உபயோக கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
3 / 10
மதுரையில் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில், துணை கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார். வலமிருந்து, துணை மேயர் கோபால கிருஷ்ணன், நடிகர் பொன்னம்பலம், அமைச்சர் செல்லூர் ராஜு, மேயர் ராஜன் செல்லப்பா, போஸ் எம்.எல்.ஏ.
4 / 10
சென்னை, எண்ணூர் துறைமுகத்தில், கடலை தூர்வாறும் டிசிஐ டிரெட்ஜ் எக்ஸ் ஐ எக்ஸ் கப்பபை மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் நாட்டிற்கு அர்பணித்தனர்.
5 / 10
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவபதி, இலங்கை அகதி பெண் ஒருவருக்கு தையல் இயந்திரம் வழங்கினார். அருகில், எம்.பி., குமார், கலெக்டர் ஜெயஸ்ரீ, மேயர் ஜெயா.
6 / 10
கரூர் அரசு கலைக்கல்லூரியில் நடந்த விழாவில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு, பேக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். அருகில் கலெக்டர் ஜெயந்தி, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.,காமராஜ்.
7 / 10
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த தென்பேர் கிராமத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ராமமூர்த்தி எம்.எல்.ஏ., நிவாரண உதவிகளை வழங்கினார்.
8 / 10
ஊட்டியில் நடந்த அ.தி.மு.க., செயல்வீரர் கூட்டத்தில், நிதியமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார்.
9 / 10
விருதுநகர் மாவட்டம், சிவகாசி எஸ்.எப்.ஆர்., கல்லூரியில் நடந்த விழாவில், மாணவிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி லேப்-டாப் வழங்கினார். அருகில் கலெக்டர் ஹரிஹரன்.
10 / 10
நெல்லையில் ரோடு விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்டு பின், கட்டப்படாமல் விட்ட பயணிகள் நிழற்குடையை மீண்டும் கட்ட வலியுறுத்தி, பா. ஜ., கட்சியினர் குடைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement