அரசியல்ஆல்பம்:

24-Dec-2012
1 / 10
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் மாநில முதல்வர் அர்ஜூன் முண்டாவை சந்தித்து பேசினார்.
2 / 10
மகாராஷ்டிரா மாநிலம் பாரமதியில்நடைபெற்ற 93-வது மராத்தி நாட்டிய சம்மேளனத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார், மாநில முதல்வர் பரித்விராஜ் சவான், துணை முதல்வர் அஜித் பவார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
3 / 10
சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்கம் சார்பில் நடந்த சங்கரதாஸ் சுவாமிகள் 90வது ஆண்டு குருபூஜை விழாவில், அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி, நலிந்த நாடக கலைஞர்களுக்கு பணமுடிப்பு கொடுத்து கவுரவித்தார். அருகில் எம்.பி., செம்மலை, மேயர் சவுண்டப்பன், எம்.எல்.ஏ., செல்வராஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகள்.
4 / 10
பெருந்துறையில் நடந்த திருப்பூர் லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், தமிழக நிதித்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார்.
5 / 10
பூரண மதுவிலக்குகோரி, நடைபயணம் மேற்கொண்டுள்ள, ம.தி.மு.க.,பொதுசெயலாளர் வைகோ,விருதுநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
6 / 10
தேனி மாவட்டம், லோயர்கேம்பில் பென்னிகுக் மணிமண்டபம் கட்டுமானப்பணிகள் குறித்து அமைச்சர்கள் ராமலிங்கம், பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டனர்.
7 / 10
திருவாரூரில், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மா.கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பேசினார்.
8 / 10
மதுரையில், விடுதலை வீரர் அழகு முத்துக்கோன் ஆவணப்பட "சிடி'யை, மத்திய அமைச்சர் சிதம்பரம் வெளியிட, மலேசியா பாண்டியன் பெற்றுக் கொண்டார். இடமிருந்து, அழகிரி எம்.பி., இளைஞர் காங்., முன்னாள் துணைத் தலைவர் வரதராஜன், பெரியகருப்பன் எம்.எல்.ஏ., செவத்தசாமி, யாதவ மகாசபை தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், தேவநாதன்.
9 / 10
விழுப்புரத்தில் நடந்த அ.தி.மு.க., விவசாயிகள் பிரிவு ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மோகன் பேசினார். அருகில் மாவட்ட செயலாளர் லட்சுமணன், விவசாயிகள் பிரிவு மாவட்ட செயலாளர் தணிகாசலம்,முன்னாள் அமைச்சர் சண்முகம்.
10 / 10
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.பேராயர் எஸ்றா சற்குணம் விஜயகாந்த்துக்கு கேக் ஊட்டினார்.உடன் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்,பிரேமலதா.