அரசியல்ஆல்பம்:

25-Dec-2012
1 / 10
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் 24 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மலர்கள் தூவி வணங்கி மரியாதை செலுத்திய முதலமைச்சர் ஜெயலலிதா.
2 / 10
அரசுமுறைப்பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தலைநகர் டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.
3 / 10
இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தலைநகர் டில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துப் பேசினார்.
4 / 10
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் 24 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் உளமார உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட முதலமைச்சசர் ஜெயலலிதா. உடன் அ.தி.மு.க., முக்கிய பிரமுகர்கள்.
5 / 10
அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட மூதாட்டியுடன் உரையாடும் அசோம் கணபரிஷத் தலைவர் பிரபுல்லா குமார் மகந்தா.
6 / 10
இமாச்சல் பிரதேச பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்த மாநில முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால்.
7 / 10
டில்லியில் பெண் பாலியல் பலாத்காரத்தையடுத்து டில்லியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாக, பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினர்.
8 / 10
பீகார் மாநிலம் ஆர்வாலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தள் கட்சி தலைவர் லாலு சிறப்புரையாற்றினார்.
9 / 10
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர், எம்.ஜி.ஆரின் 24ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை, மெரீனா கடற்கரையி ல் உள்ள, அவர து நினைவி ட த்தி ல் வெள்ளமென குவிந்த பொதும க்க ள்.
10 / 10
பேனர் யுத்தம்: தேவகோட்டை நகராட்சி தலைவர்-கவுன்சிலர்கள் மோதல் பல நாட்களாக நீடித்து வருகிறது. சமீபத்தில் தேவகோட்டையில் கூடுதல் வழித்தடத்தில் பஸ் இயக்க விழா நடத்தப்பட்டது. விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரில், அரசு அதிகாரிகளின் பெயர்களை கூட அ.தி.மு.க.,வின் கலரில் எழுதியிருந்தனர்.ஆனால் அந்தக் கட்சியை சேர்ந்த நகராட்சி தலைவர் சுமித்ராவின் பெயரை மட்டும் சாதாரண கலரில் எழுதியிருந்தனர். ஒருவேளை அவர் அ.தி.மு.க.,வில் இல்லை என்று நிர்வாகிகள் நினைத்து விட்டனரோ என்னமோ.
Advertisement