அரசியல்ஆல்பம்:

26-Dec-2012
1 / 10
மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி, நடைபயணம் மேற்கொண்ட, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, மதுரையில் நடந்த நிறைவு விழாவில் கலந்துகொண்டார்.
2 / 10
குஜராத் மாநிலம் காந்திநகரில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது. குத்துவிளக்கேற்றி கூட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் நரேந்திர மோடி, பா.ஜ. மூத்தத் தலைவர் அருண் ஜெட்லி.
3 / 10
மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் பங்கேற்ற பா.ஜ. மூத்தத் தலைவர் சுஷ்மா சுவராஜ், நடிகர் அமிதாப் பச்சன்.
4 / 10
டில்லியில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்பில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் பலியானார். அவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஷீலா தீட்சித், டில்லி போலீஸ் கமிஷ்னர் நீரஜ் குமார்.
5 / 10
ஹிமாச்சல பிரதேச மாநிலம் ஷிம்லாவில் நடைபெற்ற விழாவில் வீரபத்திர சிங் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அருகில் கவர்னர் ஊர்மிளா சிங்.
6 / 10
அலகாபாத்தில் உள்ள மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப நிறுவன மாணவர்களுக்கு பட்டமளித்து பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.
7 / 10
டில்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பா.ஜ. தலைவர்கள் நிதின் கட்காரி, வெங்கய்யா நாயுடு (இடது).
8 / 10
பீகாரின் பாட்னாவில் நடைபெற்ற 31வது தேசிய டேக்வான்டோ போட்டியை துவக்கி வைக்க வந்த முதல்வர் நிதிஷ் குமார்.
9 / 10
மங்கலம்பேட்டை அடுத்த ஆலடி கிராமத்தில், அழகிரி எம்.பி., மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
10 / 10
கடலூர் மாவட்டத்தில் "தானே' புயலில் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு அமைச்சர்கள் மோகன், சம்பத் நிவாரணத் தொகை வழங்கினர். அருகில் கலெக்டர் கிர்லோஷ்குமார், எம்.எல்.ஏ.,க்கள் சொரத்தூர் ராஜேந்திரன், செல்வி ராமஜெயம், சிவசுப்பரமணியன்.
Advertisement