அரசியல்ஆல்பம்:

27-Dec-2012
1 / 13
குஜராத்தின் ஆமதாபாத்தில் நடைபெற்ற விழாவில் நரேந்திர மோடி நான்காவது முறையாக முதல்வர் பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் கலந்து கொண்டு பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
2 / 13
ஆமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு அவரை வாழ்த்திய பா.ஜ. மூத்தத் தலைவர் சுஷ்மா சுவராஜ்.
3 / 13
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற முதல்வர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு வந்திருந்த அவரது தாயார் ஹீராபென் மோடி.
4 / 13
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற முதல்வர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பா.ஜ. மூத்தத் தலைவர் வெங்கய்யா நாயுடு, சிவ சேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே.
5 / 13
டில்லியில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் முன்பாக தமது மகள் அபராஜிதாவுடன் உற்சாக போஸ் கொடுத்த ஹிமாச்சல பிரதேசம் முதல்வர் வீர்பத்திர சிங்.
6 / 13
டில்லி வந்துள்ள நேபாள அதிபர் ராம் பரண் யாதவ், தமது குடும்பத்தினருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார்.
7 / 13
மேற்கு வங்க மாநிலம் சில்குரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி.
8 / 13
டில்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மணிஷ் திவாரி.
9 / 13
பள்ளி மாணவி புனிதா படுகொலையை கண்டித்து, தூத்துக்குடியில், தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கனிமொழி எம்.பி., பங்கேற்றார். அருகில், துணைபொதுச்செயலர் சற்குணபாண்டியன்(வலது).
10 / 13
தூத்துக்குடியில், கொலை செய்யப்பட்ட மாணவி புனிதாவின் தாயார் பேச்சியம்மாளிடம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன், நிவாரண உதவி வழங்கினார்.
11 / 13
சிதம்பரம் நகராட்சி கூட்டம் சேர்மன் நிர்மலா சுந்தர் தலைமையில் நடந்தது.
12 / 13
கடலூர் செம்மண்டலம் எம்.ஜி.ஆர்., நகரில் 28 ஆண்டுகளாக மின் இணைப்பு இன்றி இருந்த வீடுகளுக்கு புதிதாக மின் இணைப்பு வழங்கி அமைச்சர் சம்பத் துவக்கி வைத்தார்.
13 / 13
செஞ்சியில் பா.ஜ, சார்பில் நடந்த வாஜ்பாய் பிறந்த நாள் விழாவில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
Advertisement