அரசியல்ஆல்பம்:

28-Dec-2012
1 / 10
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், சுவாமி தரிசனம் செய்ய வந்த தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலின் மனைவி துர்கா.
2 / 10
டில்லியில் நடைபெற்ற, தேசிய வளர்ச்சி குழும கூட்டத்தில், குஜராத் முதல்வர், நரேந்திர மோடியுடன் அளவளாவும் மத்திய அமைச்சர்கள், சரத் பவார், அந்தோணி, சிதம்பரம் மற்றும் குலாம் நபி ஆசாத்.
3 / 10
டில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா.
4 / 10
டில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்.
5 / 10
ஆந்திராவின் ஆனந்த்பூர் மாவட்டத்தில் உலக தெலுங்கு மாநாட்டினை முதல்வர் கிரண் குமார் ரெட்டி துவக்கி வைத்தார். தெலுங்கு தள்ளி எனப்படும் தெலுங்கு அன்னையின் சிலைக்கு மாலையிட்டு வணங்கிய கிரண் குமார்.
6 / 10
உத்தர பிரதேச மாநிலம் வாரனாசியிலுள்ள பனாராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 20வது தேசிய குழந்தைகள் மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு நினைவு பரிசு வழங்கிய மாணவர்கள்.
7 / 10
மேற்கு வங்க மாநிலம் கூச் பீகார் பகுதயில் நடைபெற்ற பேரணியில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி.
8 / 10
திருப்பதியில் வெங்கடேஸ்வர பெருமாளை தரிசித்துவிட்டு திரும்பிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.
9 / 10
டில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மன்மோகன் சிங்.
10 / 10
டில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தின் போது சந்தித்து பேசிக் கொண்ட பஞ்சாப் கவர்னர் சிவ்ராஜ் பாட்டீல், உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே.
Advertisement