அரசியல்ஆல்பம்:

29-Dec-2012
1 / 10
நெல்லையில் வெட்டவெளியில் நடந்த தி.மு.க.,பார்லி.,தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தின் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.
2 / 10
டில்லியில், பெண் கற்பழிப்பு தொடர்பாக நிகழ்ந்த கலவரங்கள் ஓயவில்லை. "முதல்வர் ஷீலா தீட்ஷீத் பதவி விலக வேண்டும்' என, போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், டில்லியில் நேற்று, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 128வது நிறுவன தினம் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட, பிரதமர் டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷீத், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, ஆகியோர் அளவளாவுகின்றனர்.முதல்வர் முகம் வாடியுள்ளது.
3 / 10
சென்னை விமானநிலையம் வந்த ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியை, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா மற்றும் கவர்னர் ரோசய்யா பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
4 / 10
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் 48 பிறந்த நாளையொட்டி மயிலாப்பூர் அன்னை இல்லத்தில் சிறுவர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கேக் வெட்டி கொண்டாடினார். காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
5 / 10
நாளை தி.மு.க., சார்பில் ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடக்கவுள்ள இளைஞர் எழுச்சி பயிற்சி பாசறை கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்க இருப்பதால் விழா மேடை அமைக்கும் பணியினை, மத்திய இணையமைச்சர் காந்திசெல்வன் பார்வையிட்டு ஆலோசனை செய்தார். அருகில் சேலம் மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம்.
6 / 10
திருச்சி மாநகராட்சிக்கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலருக்கு நேற்று அறை விழுந்ததையடுத்து, மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் தி.மு.க.,வினர் நேற்று வெளிநடப்பு செய்தனர்.
7 / 10
விருதுநகர் அருகே புதுக்கோட்டையில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி பாண்டி மனைவியிடம், உதவிதொகையை பாண்டியராஜன் எம்.எல்.ஏ., (இடமிருந்து 2வது) வழங்கினார்.
8 / 10
சென்னை, பூந்தமல்லியில் நடந்த தமிழக பா . ஜ ., கட்சியின் மாநில அமைப்பு திருவிழா 2012 - என்ற விழாவில் 2 வது முறையாக தமிழக பா . ஜ ., கட்சியின் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொன் ராதாகிருஷ்ணனுக்கு பெங்களூர் மாநகராட்சி மன்ற உறுப்பினர் பா . ஜ ., கட்சியை சேர்ந்த தனராஜ் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார் . உடன் பா.ஜ.க., வின் மத்திய தேர்தல் பார்வையாளர் பண்டாரு தத்தாரேயா , தமிழக பொருப்பாளர் முரளிதர ராவ் , தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன்.
9 / 10
நெல்லையில் வெட்டவெளியில் நடந்த தி.மு.க.,பார்லி.,தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தின் போதுமழை கொட்டியது. தொண்டர்கள் நனைந்தபடியும், பிளாஸ்டிக் சேர்களை தலைக்குமேல் பிடித்தபடியும் அவதிப்பட, தலைவர்கள் பாதுகாப்பாக மேடையில் அமர்ந்திருந்தனர்.
10 / 10
ராமநாதபுரத்தில், மத்திய அமைச்சர் வாசன் பிறந்தநாளை முன்னிட்டு காங்., மாவட்ட செயலாளர் ரவி இலவச வேட்டி வழங்கினார். வலமிருந்து காங்., நிர்வாகிகள் சுகுமார், தினேஷ்பாபு, முத்துராமலிங்கம்.
Advertisement