அரசியல்ஆல்பம்:

09-Jan-2013
1 / 10
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.விற்கு அளித்து வந்த ஆதரவினை விலக்கி கொண்டதற்கான கடிதத்தினை கவர்னர் சையத் அகமத்திடம் வழங்கினார் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் சிபுசோரன்.
2 / 10
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தனது ஆதரவினை விலக்கி கொண்டதையடுத்து பா.ஜ.வைச் சேர்ந்த முதல்வர் அர்ஜூ்ன் முண்டா தனது பதவியை ராஜினாமா செய்து கவர்னர் சையத் அகமத்திடம் கடிதத்தினை அளித்தார்.
3 / 10
குஜராத் மாநிலத்தில் காந்திநகரில் தொலை நோக்கு திட்டம் -2013-ம் ஆண்டு மாநாடு ‌நடந்தது. இதில் வைக்கப்பட்டிருந்த ஸ்டால்களை அம்மாநில முதல்வர் நரேந்திர‌மோடி பார்வையிட்டார்.
4 / 10
மேற்குவங்க மாநிலம் பிர்ஹாம் மாவட்டத்தில் திரிணாமுல் காங். கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் எம்.பி. முகுல்ராய் பேசினார்.
5 / 10
ஆந்திராவில் இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் பேரில் எம்.ஐ.எம். கட்சி எம்.எல்.ஏ. அக்பரூதின் ஓவாய்சி, செகந்திராபாத் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தார்.
6 / 10
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்-திருச்சி சாலை 34வது வார்டு மக்களுக்கு, விலையில்லா வேட்டி, சேலையை எம்.எல்.ஏ., பாஸ்கர் வழங்கினார்.
7 / 10
ஈரோடு, கொடுமுடி ஒன்றிய தே.மு.தி.க., சார்பில் விஜயகாந்த் மீது பொய் வழக்கு போடுவது, தமிழகத்தின் மின்வெட்டு உட்பட பல்வேறு பிரச்னைகளை கண்டித்து, சாலைப்புதூரில் எம்.எல்.ஏ., சந்திரகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
8 / 10
தர்மபுரியில், நடந்த திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெற்ற திருவள்ளுவர் அறிவகம் மாணவி புவனேஸ்வரிக்கு, அமைச்சர் பழனியப்பன் பரிசு வழங்கினார்.
9 / 10
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் ரமணா தலைமையில் மண்டல வருவாய் சீராய்வு கூட்டம் நடைபெற்றது.
10 / 10
லயோலா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியும், லயோலா ஆராய்ச்சி குழுவும் இணைந்து தொழில்நுட்ப முறையில் கழிவுகள் மறுசுழற்சி பற்றிய தேசிய கருத்தரங்கு நடந்தது. இதில், அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துக்கொண்டு ஆராய்ச்சி விழா மலரை வெளியிட்டார்.