அரசியல்ஆல்பம்:

10-Jan-2013
1 / 11
கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று பொது மக்களுக்கு பரிசு வழங்கிய முதல்வர் ஜெயலலிதா.
2 / 11
குஜராத் தலைநகர் காந்திநகரில் நடைபெற்ற சர்வதேச முதலிட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட டொராண்டோ பல்கலைக்கழக துணை வேந்தருடன் பேசிய முதல்வர் நரேந்திர மோடி.
3 / 11
கொச்சி வந்த மொரிஷியஸ் அதிபர் ராஜ்கேஷ்வர் புர்யாக்கிற்கு நினைவு பரிசு வழங்கிய கேரள முதல்வர் உம்மன் சாண்டி.
4 / 11
டாடா குழுமத்தின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள சைப்ரஸ் மிஸ்திரி, டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
5 / 11
டில்லி வந்துள்ள வியாட்நாம் துணை பிரதமர் வு வான் நின்க்கை வரவேற்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்.
6 / 11
பாகிஸ்தான் ராணுவத்தினரால் இந்திய வீரர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சல்மான் பஷிர் டில்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு வந்திருந்தார். அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
7 / 11
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓட்டுனர் உரிமத்துக்கான ஸ்மார்ட் கார்டு திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் அகிலேஷ் யாதவ்.
8 / 11
மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற காணை வி.இ.டி., கல்வியியல் கல்லூரி பி.எட்., மாணவிக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
9 / 11
விருத்தாசலத்தில், தி.மு.க., இளைஞரச உறுப்பினர் சேர்க்கை முகாமில், முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன், உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை தொண்டர்களிடம் வழங்கினார்.
10 / 11
சேத்தியாத்தோப்பு அடுத்த தெற்கு விருதாங்கன் கிராமத்தில் மனு நீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகளை புவன கிரி எம்.எல்.ஏ., செல்விராமஜெயம் வழங்கினார்.
11 / 11
'மழை பொய்த்ததால், விருதுநகர் அருகே கவலூரில் கருகிய பயிர்களை பார்வையிட்ட, எம்.பி., லிங்கம் தலைமையிலான இந்திய கம்யூ., குழு .'
Advertisement