அரசியல்ஆல்பம்:

29-Jan-2013
1 / 16
தமிழகத்தை சேர்ந்த மும்பை ஆட்டோ டிரைவர் ஜெயகுமாரின் மகள் பிரேமா, பட்டய கணக்கர் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்ததற்காக, 5 லட்ச ரூபாய்கான காசோலையை மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் வழங்கினார். உடன், துறைமுக அதிகாரிகள்.
2 / 16
டில்லியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்த பூடான் ராணி ஜெட்சன் பெமா.
3 / 16
டில்லியில் என்.சி.சி. அமைப்பினர் நடத்திய அணிவகுப்பில் கலந்து கொண்டு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்.
4 / 16
டில்லியில் பா.ஜ. தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து தெரிவித்த கர்நாடக முதல்வர் ஜெகதிஷ் ஷெட்டர்.
5 / 16
டில்லியில் நடைபெற்ற சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ், மக்களவை சபாநாயகர் மீரா குமார்.
6 / 16
பீகார் மாநிலம் பாட்னாவில் போலீசாரால் தாக்கப்பட்ட கட்சி தொண்டரை மருத்துவமனையில் சென்று சந்தித்து ஆறுதல் சொன்ன ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ்.
7 / 16
மேற்கு வங்க மாநிலம் சில்குரியில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய முதல்வர் மம்தா பானர்ஜி.
8 / 16
டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பழங்குடியினத்தவர்கள் வழங்கிய பரிசு பொருட்களுடன் உற்சாக போஸ் கொடுத்த துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, அவரது மனைவி சல்மா.
9 / 16
ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த ரத்த தர மேலாண்மை குறித்த நிகழ்ச்சியை சுகாதரத்துறை அமைச்சர் விஜய் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். உடன் ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் கீதாலட்சுமி, மற்றும் ரத்த மாற்று சிகிச்சை துறை தலைவர் ராஜ்குமார்.
10 / 16
நாட்டார்மங்கலத்தில் நடந்த தி.மு.க., ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் நிதி வசூலை முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
11 / 16
தேவர் உட்பிரிவில் பிரமலைக்கள்ளர் வகுப்பினரைச் சேர்க்க வலியுறுத்தி, புதுச்சேரி முற்போக்கு தேவர் பேரவையினர் முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை கொடுத்தனர்.
12 / 16
உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூரில் தி.மு.க., உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையை சட்டத்துறை செயலர் பாரதி வழங்கினார். அருகில் மாவட்ட செயலர் பொன்முடி.
13 / 16
சிவகங்கையில் நடந்த அ.தி.மு.க.,அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.
14 / 16
உத்தர பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா, முதல்வர் அகிலேஷ் யாதவ்.
15 / 16
மும்பையில் நடைபெற்ற விவேகானந்தா கல்வி மையத்தின் பொன் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.
16 / 16
தனி தெலுங்கானா மாநிலம் வலியுறுத்தி ஐதராபாத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், கட்சி எம்.பி. விஜயசாந்தி.
Advertisement