அரசியல்ஆல்பம்:

30-Jan-2013
1 / 15
புரியும், ஆனா புரியாது ! தி.மு.க மத்திய அமைச்சர், மு.க.அழகிரியின் பிறந்த நாளை முன்னிட்டு, சம்பந்தபட்டவர்களுக்கு புரிந்தால் போதும் என்று உள்குத்து வைத்து, அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர். இடம்:சேப்பாக்கம்.
2 / 15
குஜராத் மாநிலம் காந்திநகரில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை, ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், பா.ஜ. தலைவருமான வசுந்தரா ராஜே சந்தித்து பேசினார்.
3 / 15
பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சுதந்திர போராட்ட தியாகியும், அரசியல்வாதியுமான ஜெய பிரகாஷ் நாராயணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
4 / 15
புதுடில்லி ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நின்று கொண்டிருந்த ரயில் ஒன்றின் ஓட்டுனர் அறைக்கு சென்று ரயிலின் இயக்கம் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார்.
5 / 15
மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற எம்.பி.யும், கட்சித் தலைவர் சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சூலேவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
6 / 15
மேற்கு வங்க மாநிலம் டார்ஜலிங்கில் உத்தர்பங்கா உற்சவத்தின் துவக்க விழாவில் பங்கேற்ற முதல்வர் மம்தா பானர்ஜி.
7 / 15
டில்லியில் 19வது சர்வதேச செயற்கோள் மூலமாக ஒளிபரப்பு மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் மணிஷ் திவாரி (இடது), விஞ்ஞானியும், தொழிலதிபருமான சாம் பிட்ரோடா.
8 / 15
டில்லியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கினார்.
9 / 15
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் ஆதரவாளரான அம்மாநில முன்னாள் அமைச்சர் ஷோபா கரந்தலஜே, பெங்களூருவில் சபாநாயகரை சந்தித்து பேசிவிட்டு திரும்பினார்.
10 / 15
ஐதராபாத்தில் தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க கோரி வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள்.
11 / 15
டில்லியில் மாணவர்களின் ஒவியக் கண்காட்சி குறித்த கையேட்டை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
12 / 15
தர்மபுரி சம்பவத்துக்கு நீதி கேட்டு, வேலூரிலிருந்து சென்னை வரை எழுச்சி நடை பயணம் செய்த, சமூக சமத்துவ படை கட்சி நிறுவனர் சிவகாமி, சென்னை சைதாப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.
13 / 15
உளுந்தூர்பேட்டை அரசு ஐ.டி.ஐ.,யில் நலத்திட்ட உதவிகள் மற்றும் விலையில்லா சைக்கிள்களை தொழிலாளர் துறை அமைச்சர் செல்லபாண்டியன் வழங்கினார்.
14 / 15
உளுந்தூர்பேட்டை அடுத்த நெய்வனையில் நவீன வசதிகளுடன் கட்டப்படும் சமுதாய கூட கட்டுமான பணியை ஆனந்தன் எம்.பி., பார்வையிட்டார்.
15 / 15
டில்லியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாடிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
Advertisement