அரசியல்ஆல்பம்:

31-Jan-2013
1 / 15
தி.மு.க., கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜேம்ஸ் விஜயராகவன், துணை அமைப்பாளர்கள் தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அருகில் மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம்.
2 / 15
ஐதாராபாத்தில் உள்ள பாபுகாட் பகுதியில் தேச பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்திய முதல்வர் கிரண் குமார் ரெட்டி, கவர்னர் நரசிம்மன்.
3 / 15
மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். அருகில் அவரது மனைவி காந்தி, மகன் தயாநிதி, மருமகள் அனுஷா.
4 / 15
டில்லியில் மகாத்மா காந்தியின் சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டில் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.
5 / 15
தேச பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினம் தியாகிகள் தினமாக நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. டில்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய பிரதமர் மன்மோகன் சிங்.
6 / 15
டில்லியில் மகாத்மா காந்தியின் சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டில் அஞ்சலி செலுத்திய பா.ஜ. மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானி.
7 / 15
தேச பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு டில்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அமர்ந்து மவுனாஞ்சலி செலுத்தும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷின்டே, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் (இடது).
8 / 15
பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் தேவானந்த் கொன்வர், முதல்வர் நிதிஷ் குமார்.
9 / 15
டில்லியில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்துவிட்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் மணிஷ் திவாரி.
10 / 15
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற ஜன்தந்தரா பேரணியில் கலந்து கொண்ட சமூக சேவகர் அன்னா ஹசாரே, முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்.
11 / 15
நெல்லையில் விவசாயிகள் தற்கொலைகள் தொடர்ந்து நடப்பதால், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி வைகோ தலைமையில் ம.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12 / 15
கோட்டூர்புரத்தில்"சென்னை அறிவியல் திருவிழா' என்ற கண்காட்சியை உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
13 / 15
வளத்தியில் நடந்த நிகழ்ச்சியில் தி.மு.க., உறுப்பினர்கள் அடையாள அட்டைகளை முன்னாள் அமைச்சர் பொன்முடி கட்சியினரிடம் வழங்கினார். அருகில் மாவட்ட அவைத்தலைவர் மஸ்தான்.
14 / 15
பண்ருட்டி நகர அ.தி.மு.க., சார்பில் நடந்த எம்.ஜி.ஆரின் 96வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சம்பத் பேசினார்.
15 / 15
டில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, மேற்கு வங்க முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ண காந்தி, எழுத்தாளர் ஆசிஷ் நந்தி.