அரசியல்ஆல்பம்:

07-Feb-2013
1 / 17
திட்டக்குடி அடுத்த அதர்நத்தத்தில் விலையில்லா பொருட்களை தமிழ் அழகன் எம்.எல்.ஏ., வழங்கினார். அருகில் ஒன்றிய சேர்மன் கந்தசாமி.
2 / 17
பீகாரின் புத்தகயாவில் புத்த மகாத்சவ விழாவினை துவக்கி வைத்த முதல்வர் நிதிஷ் குமார்.
3 / 17
டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பேசிய குஜராத் முதல்வரும், பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளர் போட்டியில் முதலிடத்தில் உள்ளவருமான நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
4 / 17
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் சுகாதாரம் தொடர்பான நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்றார். விழாவில் கைகோர்த்து பள்ளி சிறுமிகளுக்கு உற்சாகமளித்த சோனியா.
5 / 17
பெங்களூரு, எலங்கா விமான தளத்தில், துவங்கிய, "ஏரோ இந்தியா - 2013' விமான கண்காட்சியில், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் நிறுவனம் தயாரித்த, "ருத்ரா' போர் ஹெலிகாப்டரை, ராணுவ அமைச்சர் அந்தோணி பார்வையிட்டார். உடன், விமானப்படை தளபதி, நாக் பிரவுணி.
6 / 17
உ.பி.,யின் அலகாபாத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில், கலந்துகொள்ள வந்த பா.ஜ., கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், திரிவேணிசங்கமத்தில் குளிக்க வந்தார்.
7 / 17
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மகள் அனிதா, தன் தந்தை பற்றி எழுதியுள்ள, "நேதாஜி சுபாஷ் சந்திர போசும், ஜெர்மனியும்' என்ற புத்தகத்தின் முதல் பிரதியை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டில்லியில் வெளியிட்டார். உடன், நூலாசிரியர் அனிதா.
8 / 17
ஆந்திராவின் ரெங்காரெட்டி மாவட்டத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா மற்றும் தாயார் விஜயம்மா.
9 / 17
காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதை தடுப்பது குறித்து, பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், சட்டசபை, மேலவை எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
10 / 17
என்ன சொன்னாலும் போக்குவரத்து விதியேல்லாம் எங்களுக்கு பொருந்தாது. நாங்க சீட் பெல்டெல்லாம் போடமாட்டோம். டிரைவரையும் சேத்துதான். என்றபடி சட்டசபையிலிருந்து சீட் பெல்ட் போடாமல் காரில் கிளம்பிய தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின். தலைவன் எவ்வழியோக டிரைவரும் அவ்வழியே...!
11 / 17
அய்யா கருப்பசாமி, முனீஸ்வர சாமி காப்பாத்துப்பா...! பகுத்தறிவு கட்சியிலிருந்து, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டசபையில், தைரியமாக பேச கருப்பு சாமி, முனீஸ்வரர், தைரியலட்சுமி, எல்லோரையும், வேண்டிகிட்டு கருப்பு, சிகப்புன்னு, கயிறெல்லாம் கையில் கட்டிட்டு வந்த, டி.ஆர்.பாலுவின் மகனும், தி.மு.க., எம்.எல்.ஏ., வுமான ராஜா. ஒரு வேளை தலைவருக்கு மஞ்சள் துண்டு போல் ,இவருக்கு இந்த கயிறு தான் சென்டிமென்ட்டோ!
12 / 17
இதய தெய்வத்தை, இதயத்தில் சுமந்து வந்த ராதாபுரம் தொகுதி தே.மு.தி.க., எம்.எல்.ஏ., மைகேல் ராயப்பன். இவரை பின் தொடர்ந்து படம் எடுக்க முற்பட்டபோது, இதயத்தில் இருக்கும் இதய தெய்வத்தை, முதலில் கையை வைத்து மறைத்தார் தொடர்ந்து படம் எடுக்கவே, கையை பாக்கெட்டிலிருந்து எடுத்துவிட்டார். முழுக்க நனைஞ்சாச்சு அப்புறம் முக்காடு எதுக்கு...!
13 / 17
அண்ணே எங்கள வெளியோத்திட்டாங்கன்ன...! ஆவேசத்துடன் கைபேசியில் தகவல் சொன்ன ஏ.வா.வேலு எம்.எல்.ஏ., தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டுக்கு யார் காரணம் என்று எழுந்த கேள்விக்கு அ.தி.மு.க., தி.மு.க., இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதையடுத்து கூண்டோடு வெளியேற்றப்பட்ட தி.மு.க., எம்.எல்.ஏ.கள்.
14 / 17
சட்டசபைக்கு இரண்டாவது நாளாக கருப்பு சட்டையணிந்து வந்த தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,கள். வெளி நடப்பு இல்லை...
15 / 17
ஒலக்கூர் ஒன்றியம் ஆட்சிப்பாக்கம் கிராமத்தில் மினி குடிநீர் தொட்டியை அரிதாஸ் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
16 / 17
டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் தேசிய பாதுகாப்பு குறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
17 / 17
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்ற விழாவில் பஞ்சாரா இனப் பெண்களுடன் உற்சாக போஸ் கொடுத்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா.
Advertisement