அரசியல்ஆல்பம்:

08-Feb-2013
1 / 19
ராஜ்யசபா எம்.பி., சிவா மகள் திருமணத்துக்கு திருச்சி வந்து, சென்னை செல்ல, திருச்சி விமான நிலையம் சென்ற குஷ்புக்கு(முதல்படம்) எதிராக, தி.மு.க., மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 / 19
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு விழா கவர்னர் மாளிகையில் நடந்தது.அவருக்கு முதல்வர் ஜெயலலிதா மற்றும் கவர்னர் ரோசைய்யா மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
3 / 19
மைசூரில் நடைபெற்ற விழாவில் கன்னட நடிகை ஸ்ருதி (இடது), முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சியில் சேர்ந்தார். ஸ்ருதியை வரவேற்கும் முன்னாள் அமைச்சர் ஷோபா, எடியூரப்பா.
4 / 19
நாகலாந்து மாநிலத்தில் வரும் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திமாபுரில் தேர்தல் பிரச்சாரத்தில் நாகலாந்து பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
5 / 19
தமது சொந்த தொகுதியான உத்தர பிரதேசம் மாநிலம் அமேதியில் உள்ள பள்ளியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
6 / 19
பா.ஜ. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக சென்னை வந்த ராஜ்நாத் சிங்கிற்கு, தமிழக பா.ஜ. சார்பாக கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
7 / 19
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவிலுள்ள அலிப்பூர் உயிரியியல் பூங்காவில் தானியங்கி நுழைவு வாயிலை முதல்வர் மமதா பானர்ஜி துவக்கி வைத்தார்.
8 / 19
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவில் பிரார்த்தனை மேற்கொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் இந்திரஜித் முகர்ஜி குடும்பத்தினர்.
9 / 19
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்த கலாசாரத் துறை அமைச்சர் சந்திரேஷ் குமாரி கடோச்.
10 / 19
டில்லியில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
11 / 19
உத்தர பிரதேச மாநிலத்தில் புதிய அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ராஜேந்திர சவுதாரியை (வலது) வாழ்த்தும் கவர்னர் பி.எல்.ஜோஷி. அருகில் முதல்வர் அகிலேஷ் யாதவ்.
12 / 19
ஐதராபாத் வந்த இந்தியாவுக்கான சவுதி அரேபிய தூதர் முகமது சவுத் அல் சாடி, ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியை சந்தித்து பேசினார்.
13 / 19
டில்லி வந்த பூடான் பிரதமர் லியோன்சென் ஜிக்மி யோசரை வரவேற்ற மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி.
14 / 19
டில்லியில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் பங்கேற்று திரும்பும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி.
15 / 19
டில்லியில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் ஜெய்ராம் ரமேஷ், பவன் குமார் பன்சால் (வலது), திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா (இடது).
16 / 19
உத்தரபிரதேசம் மாநிலம் அலகாபாத் மகாகும்பமேளாவில் புனித நீராடி பிரார்த்தனையில் ஈடுபட்ட ராஜ்ய சபா எம்.பி. அமர் சிங்.
17 / 19
நீங்க கருப்பு சட்டையின்னா நான் கலர்... நீங்க கருப்பு சட்டையில் வந்தா நான் இப்படி மல்டி கலர்ல வருவேன்...! என்று கலர், கலரா வந்து அசத்தும் ஆளும் கட்சி ஆதரவு, தே.மு.தி.க., எம்.எல்.ஏ., சுந்தர்ராஜன்.
18 / 19
சட்டசபையில் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசும் போது ஈழத்தமிழர்கள் விஷயத்தில் மூன்றாம் தர அரசியல் வாதியை போல் தி.மு.க., தலைவர் கருணாநிதி நடந்து கொண்டார் என்று கூறியதைக் கண்டித்து அதை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று சட்டசபையில் ரகளையில் ஈடுபட்ட தி.மு.க., எம்.எல்.ஏ.,களை குண்டு கட்டாக வெளியேற்றினர். இதையடுத்து கோஷம் எழுப்பியபடி வெளியே வந்த தி.மு.க., எம்.எல்.ஏ., கள்.
19 / 19
குரு வணக்கம்: திருச்சி தேசியக்கல்லூரி மைதானத்தில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,சிவாவின் மகள் திருமணத்துக்கு வந்த நடிகை குஷ்பூ, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் காலில் விழுந்து வணங்கினார்.
Advertisement