அரசியல்ஆல்பம்:

21-Feb-2013
1 / 16
மிகுந்த எதிர்பார்ப்பிற்கு காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியானது. சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தீர்ப்பின் நகலை காண்பிக்கும் முதல்வர் ஜெயலலிதா.
2 / 16
குஜராத் மாநிலம் காந்திநகர் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் அம்மாநில நிதி அமைச்சர் நிதின் பாய் படேல். அருகில் முதல்வர் நரேந்திர மோடி.
3 / 16
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1919ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபக்கில் நடைபெற்ற துயர சம்பவத்தின் நினைவிடத்தில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அஞ்சலி செலுத்தினார்.
4 / 16
டில்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, பா.ஜ.வை சேர்ந்த மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ்.
5 / 16
சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெற்ற ஹிந்து ஆன்மிகம் மற்றும் சேவைக்கண்காட்சியின் 5 ஆம் ஆண்டு தொடக்கவிழாவில் பங்கேற்ற பா.ஜ. மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானி, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி.
6 / 16
டில்லியில் நடைபெற்ற 2வது சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, ராணுவ தளபதி பிக்ராம் சிங்.
7 / 16
டில்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்துக்கு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங். அருகில் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கமல் நாத்.
8 / 16
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி.
9 / 16
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ. தலைவர் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி.
10 / 16
உத்தர பிரதேசம் மாநிலம் மொரதாபாத்தில் நடைபெற்ற தீர்த்தங்கர் மகாவீரர் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதல்வர் அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ்.
11 / 16
டில்லியில் நடைபெற்ற ரயில்வே தொழிலாளர்களின் பேரணியில் கலந்து கொள்ள வந்த லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான்.
12 / 16
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முன்னாள் முதல்வரும், பா.ஜ. தலைவருமான வசுந்தர ராஜேவை ஆரத்தழுவி வரவேற்கும் மூதாட்டி.
13 / 16
டில்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பேசிய மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் அஜித் சிங்.
14 / 16
தமிழகத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி மாமல்லபுரத்தில் நடைபயணம் மேற்கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
15 / 16
செங்கல்பட்டில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், காஞ்சிபுரம் லோக்சபா உறுப்பினர் விஸ்வநாதன், மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கினார்.
16 / 16
ரிஷிவந்தியம் தொகுதி வாணாபுரம் ஆரம்ப சுகாதார மையத்தில் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை எம்.எல்.ஏ.,விஜயகாந்த் மருத்துவ அலுவலர் தமிழ்செல்வியிடம் வழங்கினார். அருகில் பிரேமலதா, எம்.எல்.ஏ., வெங்கடேசன்.
Advertisement