அரசியல்ஆல்பம்:

23-Feb-2013
1 / 14
சொத்து குவிப்பு வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ., வுமான தங்கம் தென்னரசு, மதுரை ஊழல் தடுப்பு விசாரணை கோர்ட்டில், ஆஜரானார்.
2 / 14
டில்லியில், துவங்கிய பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில், உரையாற்ற வந்த, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பாரம்பரிய முறைப்படி வரவேற்று அழைத்து செல்லும், சபாநாயகர், மீரா குமார், துணை ஜனாதிபதி, அமீத் அன்சாரி மற்றும் பிரதமர், மன்மோகன் சிங்.
3 / 14
டில்லி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்ற பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி.
4 / 14
டில்லியில் படித்து வரும் சீன குழந்தைகளை தனது இல்லத்தில் சந்தித்து உற்சாகமாக நேரத்தை செலவிட்ட முதல்வர் ஷீலா தீட்சித்.
5 / 14
டில்லி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வந்த மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
6 / 14
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில் பல்வேறு பார்லிமென்ட் உறுப்பினர்களும் தங்களது குடும்பத்துடன் வந்தனர். தனது இரு மகள்களுடன் வந்த காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா எம்.பி. ரஜ்னி பாட்டீல்.
7 / 14
டில்லி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வந்த தி.மு.க. எம்.பி. ஆ.ராசா.
8 / 14
டில்லி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்ற தி.மு.க. எம்.பி. கனிமொழி.
9 / 14
டில்லி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்று திரும்பும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி.
10 / 14
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வந்த கவர்னர் மார்க்கெரட் ஆல்வாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
11 / 14
ஐதராபாத் தில்சுக் நகரில் குண்டு வெடித்த பகுதிகளை, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி பார்வையிட்டார்.
12 / 14
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் ராஜ்நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஹூமாயுன் கபிர், நடிகைகள் பிரியங்கா பால், காஞ்சனா தே.
13 / 14
முதல்வர் ஜெ., பிறந்த நாளையொட்டி சாத்தூரில் நடந்த விளையாட்டு போட்டியில், வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி மாணவனுக்கு, உதயகுமார் எம்.எல்.ஏ., பரிசு வழங்கினார்.
14 / 14
சென்னை அச்சிறுப்பாக்கம் அருகே முருங்கை ஊராட்சியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்க சென்ற மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கணிதாசம்பத்தை வழிமறித்து முற்றுகையிட்ட முன்னகுளம் கிராம மக்கள்.
Advertisement