அரசியல்ஆல்பம்:

05-Mar-2013
1 / 10
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற அனைத்து இந்திய போலீஸ் துறை மோப்ப நாய்க்கான விருதினை வென்ற தமிழக போலீஸ் துறையை சேர்ந்த மோப்ப நாயை தட்டிக்கொடுத்து பாராட்டும் முதல்வர் ஜெயலலிதா.
2 / 10
டில்லி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க உற்சாகமாக வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி.
3 / 10
ராஜபக்சே மீது அனைத்துலக விசாரணை கோரி, சென்னையில் இலங்கை தூதரகம் முன்பாக வைகோ உள்ளிட்ட பல்வேறு தமிழ்அமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
4 / 10
டில்லி வந்துள்ள போர்ச்சுக்கீசிய வெளியுறவுத் துறை அமைச்சர் பவ்லோ போர்டாசை வரவேற்கும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்.
5 / 10
டில்லியில் வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்த பா.ஜ.க.வினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்.
6 / 10
பார்லிமென்ட் கூட்டத்தொடரில் பங்கேற்று திரும்பும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்.
7 / 10
பூடான் நிதியமைச்சர் லியான்போ வாங்டியுடன் வரி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
8 / 10
பீகார் மாநிலம் ராஜ்கீரில் நடைபெற்ற விழாவில் ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை பார்வையிடும் முதல்வர் நிதிஷ் குமார்.
9 / 10
அருப்புகோட்டை ஆத்திப்பட்டியில் நடந்த விழாவில் பயனாளிக்கு, அமைச்சர் வைகைச்செல்வன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
10 / 10
பொட்டு' சுரேஷ் கொலை வழக்கில், மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரான தி.மு.க., நகர் செயலாளர் தளபதி.
Advertisement