அரசியல்ஆல்பம்:

17-Mar-2013
1 / 10
பீகார், பாட்னாவில், நேற்று நடந்த, பா.ஜ., செயற்குழு கூட்டத்தில், அருண் ஜெட்லி, சத்ருக்கன் சின்கா, சையத் ஷா நவாஸ் உசேன் உட்பட தலைவர்கள் பலர், கலந்து கொண்டனர்.
2 / 10
கண்ணகிநகரில் நடந்த மகளிர் தின விழாவில் சிறந்த மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு விருதுகளை அமைச்சர் சின்னய்யா வழங்கினார். அருகில், எம்.பி., ராஜேந்தின், எம்.எல்.ஏ., கந்தன் உள்ளிட்டோர்.
3 / 10
நானி பல்கிவாலா நடுவர் மன்றம் சார்பில், டில்லியில் நேற்று நடந்த கருத்தரங்கில், மத்திய சட்ட அமைச்சர், அஷ்வனி குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
4 / 10
கேரள மாநிலம் கோட்டயத்தில் நடைபெற்ற தபால் தலை வெளியீட்டு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் கபில் சிபல், மாநில முதல்வர் உம்மன்சாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
5 / 10
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் நாராயண்பூர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, காங்கிரஸ் எம்.பி., மவுஸம் நூர் கலந்து கொண்டனர்
6 / 10
மேற்கு வங்க மாநிலம் கோல்ட்டா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய தீயணைப்பு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.
7 / 10
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் மருத்துவகல்லூரியின் பொன்விழாவில்ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார்.
8 / 10
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே காரனூர் ஊராட்சியில் நடந்த விழாவில் பயனாளிகளுக்கு அமைச்சர் மோகன், இலவசபொருட்களை வழங்கினார். அருகில் எம்.எல்.ஏ., அழகுவேலுபாபு, கலெக்டர் சம்பத்.
9 / 10
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் பஞ்சாயத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில், எம்.எல்.ஏ., ரமணீதரன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
10 / 10
நாமக்கல் அடுத்த கணவாய்பட்டியில் நடந்த விழாவில், தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி, பயனாளி ஒருவருக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கினார். அருகில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஜகந்நதான், எம்.எல்.ஏ., பாஸ்கர், ஆர்.டி.ஓ., அஜய் யாதவ்.
Advertisement