அரசியல்ஆல்பம்:

26-Mar-2013
1 / 10
தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற நடிகை குஷ்பு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்.
2 / 10
டில்லியில் பா.ஜ. கட்சித் தலைமையிடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத்.
3 / 10
தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதி கூட்டத்திற்கு வந்த போது, எப்போதும் தான் பயன்படுத்தும் நாற்காலியில் அமர்ந்தார். அந்த நாற்காலி இப்போது அவருக்கு ஏற்றதாக இல்லையென்று, சொன்னதும், சொகுசு நாற்காலியை கொண்டு வந்து, அந்த நாற்காலிகளில் அமர்ந்தவுடன், நல்ல நாற்காலி கிடைச்சுடுச்சி சாமி... என பெரும் மூச்சுடன் அமர்ந்தார் தி.மு.க., தலைவர் கருணாநிதி.
4 / 10
தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற ராஜ்யசபா எம்.பி. கனிமொழி.
5 / 10
உத்தர பிரதேசம் மாநிலம் ரே பரேலியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
6 / 10
இந்திய கப்பல்படையை சேர்ந்த ஐ.என்.எஸ். சுதர்ஷினி, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பயிற்சியை முடித்துவிட்டு நாடு திரும்பியது. இதற்கான விழாவில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி.
7 / 10
தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டிற்கு செல்ல டில்லி விமான நிலையம் வந்த பிரதமர் மன்மோகன் சிங்.
8 / 10
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை, போராட்டக்காரர்களுடன், முற்றுகையிட வந்த, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ.
9 / 10
தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேரை, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்து, சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து, தங்களுக்காக சட்டசபையிலிருந்து, வெளிநடப்பு செய்த, தி.மு.க., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்களுக்கு கை குலுக்கி, நன்றி தெரிவித்த, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள்.
10 / 10
தென்பெண்ணை ஆற்றில் இருந்து கர்நாடகா தண்ணீர் உறிஞ்சுவதை கண்டித்து, ஓசூரில், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சி நிறுவனர் வேல்முருகன் பேசினார்.
Advertisement