அரசியல்ஆல்பம்:

29-Mar-2013
1 / 10
தூத்துக்குடியில், ஸ்டெர்லைட்டை மூடக்கோரி, போராட்டக்காரர்களுடன், அந்த ஆலையை முற்றுகையிடச் சென்ற, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ.
2 / 10
ஹிமாச்சல பிரதேசம் தலைநகர் சிம்லாவில் குழந்தைகளுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்த முதல்வர் வீர்பத்ர சிங்.
3 / 10
குஜராத் தலைநகர் காந்திநகரில் அமெரிக்காவை சேர்ந்த எம்.பி.க்கள், தொழிலதிபர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவினர் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர்.
4 / 10
கையெழுத்திட்டால் மட்டும் போதுமா...? மக்களின் குறைகளை சட்டசபையில் வாதாடவேண்டிய, தி.மு.க., தலைவர் இப்படி வெறும் கையேழுத்தாக மட்டும் செயல்படுவது வேதனை. சட்டசபை நிதிநிலை கூட்டத்துக்கு வெறும் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு உடனே திரும்பிய முன்னாள் முதல்வர் கருணாநிதி.
5 / 10
ஐதராபாத்தில் நடைபெற்ற ஹோலி நிகழ்ச்சியில் முதல்வர் கிரண் குமார் ரெட்டி கலந்து கொண்டார். லம்பாடி இனப் பெண்களுடன் உற்சாகமாக ஹோலி கொண்டாடிய கிரண் குமார் ரெட்டி.
6 / 10
ஐதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்துவிட்டு திரும்பும் அவரது மனைவி பாரதி.
7 / 10
டில்லியில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட மக்களவை சபாநாயகர் மீரா குமார், மத்திய அமைச்சர் மணிஷ் திவாரி.
8 / 10
உதவாத கை... மத்தியில் ஆளும் கை தமிழகத்து ஏமாற்றும் கையாக உள்ளது என்ற முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையை காட்டியபடி சட்டசபையிலிருந்து வெளிநடப்பில் ஈடபட்ட கைக்கு சொந்தக்காரர்கள்.
9 / 10
சென்னை சத்தியமுர்திபவனில் தியாகி சத்திய முர்த்தி நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
10 / 10
ஹோலி பண்டிகையை முன்னிட்டு மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெற்ற விழாவில் பா.ஜ. தொண்டர்களுடன் கலந்து கொண்டு மேளம் இசைத்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.