அரசியல்ஆல்பம்:

04-Apr-2013
1 / 10
சட்டசபையில் ஊரக தொழில்துறை மானிய விவாதம் நடந்ததை அடுத்து அந்த துறை அமைச்சரான மோகன் விவாதம் நடத்துவதற்கு முன்னதாக முதல்வர் ஜெ.,வை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
2 / 10
திட்ட கமிஷன் துணை தலைவர் மாண்டேகு சிங் அலுவாலியாயிடம் , சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங் அம்மாநில ஆண்டு திட்டம் வழங்கும் போது பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
3 / 10
திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுப்பேட்டையில் நடந்த அ.தி.மு.க., பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் நாகராஜன் எம்.எல்.ஏ., பேசினார்.
4 / 10
ஈரோடு, கோபி அருகே அளுக்குளி பஞ்சாயத்தில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு திட்டத்தை கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் துவக்கி வைத்தார். அருகில் பஞ்சாயத்து தலைவர் மயில்சாமி, யூனியன் தலைவர் சத்தியபாமா, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் மனோகரன்.
5 / 10
திண்டுக்கல், ஆயக்குடி பேரூராட்சி தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 / 10
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ரயில் நிலையத்தில், பயண சீட்டு முன்பதிவு மையத்தினை திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் திறந்து வைத்தார்.
7 / 10
சட்டசபையில் சமூகநலத்துறை மானிய கோரிக்கை நடந்து கொண்டிருக்கும் போது டெசோ தொடர்பாக பேசி அவமறியாதை செய்ததாக சபாநாயகரை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்து பின் வெளிநடப்பில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., எம்.எல்.ஏ.,கள்.
8 / 10
ஈரோடு வடக்கு மாவட்ட தே.மு.தி.க., சார்பில் இலவச நீர்மோர் பந்தலை மாவட்ட செயலாளர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். மாவட்ட தொழிற்சங்க செயலாளர் பூபதி உள்ளார்.
9 / 10
இலங்கை பிரச்னை மற்றும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்த, பாரதிய ஜனதா கட்சியின் சிறப்பு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுடன் உரையாடும், பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் இல.கணேசன்.
10 / 10
சமூகநலத்துறை மானிய கோரிக்கை விவாதம் சபையில் நடந்து கொண்டிருந்த நிலையில் அவசர வேலையாக வெளியே சென்ற துரைமுருகன் மற்றும் அவரை வழியனுப்ப வந்த தங்கம் தென்னரசு. இதைகண்ட பத்திரிக்கையாளர்கள் அவர்களை சூழ்ந்து படம் எடுக்க முற்பட்டபோது அய்யையோ படம் எடுக்க வேண்டாம் நாங்கள் வெளிநடப்பு செய்யவில்லை என அலரிய தி.மு.க., எம்.எல்.ஏ.,கள்.
Advertisement