அரசியல்ஆல்பம்:

08-Apr-2013
1 / 10
நீதிபதி பி.எஸ்.சோமசுந்தரத்தின் நூற்றாண்டு விழா சென்னையில் நடந்தது.இதில் விழா மலரை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் வெளியிட்டார்.உடன் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் மற்றும் நீதிபதி பி.எஸ்.சோமசுந்தரத்தின் மகன் டாக்டர் ஐயப்பன்.
2 / 10
பா.ஜ.க.வின் புதிய நிர்வாகிகள் பங்கேற்கும் முதல் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
3 / 10
பா.ஜ.க.வின் புதிய நிர்வாகிகள் பங்கேற்கும் முதல் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. கூட்டத்தின் போது உற்சாகமாக உரையாடிய கட்சியின் தலைவர்கள் ரவி சங்கர் பிரசாத் (இடது), ஸ்மிருதி இரானி (இடமிருந்து இரண்டாவது), முக்தர் அப்பாஸ் நக்வி (வலது), எஸ்.எஸ்.அலுவாலியா.
4 / 10
பா.ஜ.க.வின் புதிய நிர்வாகிகள் பங்கேற்கும் முதல் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ. தலைவர்கள் (இடமிருந்து) ஆனந்த் குமார், முரளி மனோகர் ஜோஷி, வருண் காந்தி.
5 / 10
மாநில முதல்வர்கள் மற்றும் ஐகோர்ட் தலைமை நீதிபதிகளின் கூட்டு கூட்டத்தை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர் டில்லியில் துவக்கி வைத்தார். உடன் பிரதமர் மன்மோகன் சிங், சட்ட அமைச்சர் அஸ்வனி குமார்.
6 / 10
ஒடிசா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி புவனேஸ்வரில் பீஜூ யுவ ஜனதா தள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க வந்த முதல்வர் நவீன் பட்நாயக்கை வரவேற்கும் பீஜூ யுவ ஜனதா தள் பெண் உறுப்பினர்கள்.
7 / 10
உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், பத்ம பூசன் விருது வென்ற பண்டிட் சன்னுலால் மிஸ்ரா.
8 / 10
டில்லியில் பி.டி.ஐ. அலுவலகத்துக்கு வந்த முதல்வர் ஷீலா தீட்சித் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
9 / 10
கொச்சியில் பாஸ்கர் ராவ் ஸ்மாரகா மந்தீர் துவக்க விழாவில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், விஷ்வ இந்து பரிஷத் மூத்தத் தலைவர் அசோக் சிங்கால், விருந்தில் பரிமாறப்பட்ட அறுசுவை உணவை ருசித்தனர்.
10 / 10
குள்ளஞ்சாவடியில் அ.தி.மு.க., சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை சிவசுப்ரமணியன் எம்.எல்.ஏ., திறந்துவைத்தார். அருகில் சொரத்தூர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ.,
Advertisement