அரசியல்ஆல்பம்:

15-Apr-2013
1 / 11
திருப்புத்தூரில் நடந்த தி.மு.க., கூட்டத்தில் பொருளாளர் ஸ்டாலினிடம் ஒரு சிறுவர், கட்சி நிதிக்காக ரூ.100 கொடுத்தான்.
2 / 11
டில்லியிலுள்ள புராரி பகுதியில் அம்பேத்கார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சமபந்தி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ. தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் டில்லி பா.ஜ. தலைவர் விஜய் கோயல்.
3 / 11
குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற அம்பேத்கார் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த முதல்வர் நரேந்திர மோடி.
4 / 11
டில்லி பார்லிமென்ட் வளாகத்தில் நடைபெற்ற அம்பேத்கார் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற (இடமிருந்து) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜ. மூத்தத் தலைவர்கள் எல்.கே.அத்வானி, சுஷ்மா சுவராஜ், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே.
5 / 11
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள கார்வெட்டிநகரம் கிராம மக்களுக்கு இலவச உணவு பொட்டலகங்களை முதல்வர் கிரண் குமார் ரெட்டி வழங்கினார்.
6 / 11
டில்லியில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளக் கட்சிக் கூட்டத்தில் மூன்றாவது முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட்ட சரத் யாதவ்வை வாழ்த்தும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.
7 / 11
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரம்பரிய ரங்கோலி பிஹூ நடனமாடி, முதல்வர் தருண் கோஹாய் பார்வையாளர்கள் வெகுவாக கவர்ந்தார்.
8 / 11
சங்கராபுரம்ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்ட விழா மேடையை அமைச்சர் மோகன் திறந்து வைத்தார்.அருகில் கலெக்டர் சம்பத்.
9 / 11
தியாகதுருகம் ஒன்றியம் குடியநல்லுரரில் நடந்த உழவர் பெருவிழாவில் எம்.எல்.ஏ., அழகுவேலு பாபு பேசினார்.
10 / 11
வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் நடந்த ஆண்டு விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு எம்.எல்.ஏ., ஆறுமுகம் பரிசு வழங்கினார். அருகில் கல்லூரி முதல்வர் (பொ) ரமேஷ், நகராட்சித்தலைவர் சத்தியவாணிமுத்து உள்ளனர்.
11 / 11
அ.தி.மு.க., அரசின் நிதிநிலை அறிக்கை விபரங்களை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக, அ.தி.மு.க., சார்பில், காஞ்சிபுரத்தில் நடந்த தெருமுனை பிரசார கூட்டத்தில் நடிகர் ராமராஜன் பேசினார்.
Advertisement