அரசியல்ஆல்பம்:

22-Apr-2013
1 / 10
கடலூரில் நடந்த தமிழக ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க முப்பெரும் விழாவில் அமைச்சர் சம்பத் பேசினார். அருகில் கலெக்டர் கிர்லோஷ்குமார், டி.ஆர்.ஓ. ராஜேந்திரன்.
2 / 10
டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.
3 / 10
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற பிரம்மகுமாரிகள் தீர்த்தம் விழாவினை முதல்வர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
4 / 10
கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பெங்களூரு மல்லேஸ்வரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பா.ஜ. மூத்தத் தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், ஆனந்த் குமார், சந்ரே கவுடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
5 / 10
கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் களைகட்டத் துவங்கியுள்ளது. பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட நடிகை 'குத்து' ரம்யா.
6 / 10
பெங்களூரு விஜயநகர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.கிருஷ்ணப்பா (வலது).
7 / 10
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஹிரக் ஜெயந்தி விழாவில் பங்கேற்ற ராஜஸ்தான் பா.ஜ.தலைவர் வசுந்தரா ராஜே, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங்கிடம் வாழ்த்து பெற்றார்.
8 / 10
கோல்கட்டாவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங்.
9 / 10
டில்லி நடைபெற்ற விழாவில் பொது நிர்வாகத்தில் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கான விருதை பிரதமர் மன்மோகன் சிங், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சோனஸ் மிஸ்ராவுக்கு வழங்கினார். உடன் மத்திய அமைச்சர் நாராயண சாமி, பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயர்.
10 / 10
திருவாமூர் ஊராட்சியில் நடந்த அரசு விழாவில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை சிவசுப்ரமணியன் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு வழங்கினார். அருகில் தாசில்தார் பத்மாவதி.