அரசியல்ஆல்பம்:

23-Apr-2013
1 / 11
புகை உடல் நலத்துக்கு கேடு... டில்லி பார்லிமென்ட் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய், நாடும், இளைஞர்களும் தம்மை பார்க்கிறார்களே என்ற பொறுப்புணர்வு சிறிதும் இல்லாமல் பார்லிமென்ட் வளாகத்தில் 'ஹாயாக' சிகரெட் பிடித்தார்.
2 / 11
டில்லி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிகையாளர்களை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசினார். உடன் மத்திய அமைச்சர்கள் நாராயண சாமி(இடது), கமல்நாத்.
3 / 11
கர்நாடக மாநிலம் பசவனா பகிவாடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பா.ஜ. தலைவர் ராஜ்நாத் சிங் பேசினார்.
4 / 11
டில்லி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்று திரும்பிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
5 / 11
டில்லி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் மணிஷ் திவாரி.
6 / 11
கோல்கட்டாவில் நடைபெற்ற விழாவில் உணவு மற்றும் விநியோக துறையின் இணையதளத்தை துவக்கி வைத்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
7 / 11
ஆந்திர மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஜெட்சர்லா கிராமத்தில் நடைபெற்ற விழாவில் பொது மக்களுக்கு அரிசி பைகளை முதல்வர் கிரண் குமார் வழங்கினார்.
8 / 11
டில்லி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வந்த தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத் பவார். அருகில் அவரது மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சூலே.
9 / 11
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா, உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் சந்தித்து பேசினார்.
10 / 11
சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தே.மு.தி.க., எம்.எல்.ஏ., அருண் சுப்ரமணியனை சந்தித்துவிட்டு திரும்பும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்.
11 / 11
காஞ்சிபுரம் ராமானுஜபுரத்தில் நடைபெற்ற தமிழக அரசின் பட்ஜட் விளக்கக் கூட்டத்தில் நடிகர் ராமராஜன் பேசினார்.
Advertisement