பொதுஆல்பம்:

11-டிச-2018
1 / 7
மேற்கு வங்க மாநிலம் பிர்பும் அருகே கடுகு தோட்டத்தில் நீர் பாய்ச்சும் விவசாயி.
2 / 7
சிம்லாவில் கடும் குளிர் நிலவுகிறது. லக்கார் பஜாரில் உறைபனியில் ஸ்கேட்டிங்கில் ஈடுபட்டனர்.
3 / 7
வாழ்வின் விளக்கம் என்ற புத்தகத்தினை (இடமிருந்து) தாஜ் விவான்டா பொது மேலாளர் குமார், வீட்டே இண்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் டேனியல்விக்டர், பார்வையற்றோர் தேசிய கூட்டமைப்பின் துணை தலைவர் குசும்லதா மாலிக், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதாசிவம், சென்னை மகளிர் ஒருங்கிணைப்பாளர் சித்ரா ஆகியோர் வெளியிட்டனர்.
4 / 7
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் சுமித்ரா வாசுதேவின் பாட்டு கச்சேரி நடந்தது.
5 / 7
பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் அருகே, கள்ளச்சாராயம் மற்றும் மதுபானத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
6 / 7
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வீடுகளில் குடில்கள் அமைப்பதற்காக பல விதமான பொம்மைகளை தேர்வு செய்த பெண்கள். இடம்: சிவகங்கை வியான்னி மையம்.
7 / 7
கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு சிவகாசி சிவன் கோவிலில் 1008 சங்காபிேஷகம் நடந்தது.