பொதுஆல்பம்:

19-Jun-2012
1 / 11
கங்கை, யமுனை ஆறுகளை பாதுகாக்க வலியுறுத்தி டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஸ்வரூப் ஆனந்த் சரஸ்வதி சுவாமி தலைமையில் சாதுக்கள் பிரசாரம் நடத்தினர்.
2 / 11
ஒடிசா- தமிழகம் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இந்நிகழ்வை பொருட்படுத்தாமல், மெரீனா கடற்கரையில் விளையாடி மகிழ்ந்த பெண்கள்.
3 / 11
அறநிலையத் துறை சார்பில் 1006 ஜோடிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று சென்னை திருவேற்காட்டில் திருமணம் நடந்தது. முதல்வர் ஆசிர்வதிக்க ஒரே நேரத்தில் மணமகன்கள், மணப்பெண்களின் கழுத்தில் தாலியை கட்டி மாலை மாற்றிக்கொண்டனர்.
4 / 11
ஹரியானா மாநிலம் குர்கானில், கல்லூரியில் சேர்ந்து படிக்க விண்ணப்பம் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மாணவிகள்.
5 / 11
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதலுக்கான பொது கவுன்சிலிங் சென்னை அசோக்நகர் அரசு மகளிர் பள்ளியில் நேற்று துவங்கியது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
6 / 11
தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டை விலை வரலாற்றில் அதிகபட்ச விலையாக ரூ.3.22 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதையடுத்து நாமக்கல்லில் செயல்படும் முட்டை ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ 3.22 காசு என முட்டைகளை அடுக்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
7 / 11
காந்தி அமைதி தூதுக்குழுவின் வருகையை ஒட்டி நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் காந்தியடிகளின் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
8 / 11
நெல்லை மாநகரம் முழுவதும் குற்றநடவடிக்கைகள், போக்குவரத்தை கண்காணிப்பதற்காகபொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை நெல்லை போலீஸ் கமிஷனர் கருணாசாகர் துவக்கிவைத்தார்.
9 / 11
தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியை தொடர்ந்து தியாகதுருகம் புறவழிச்சாலை துவங்கும் இடத்தில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் (ரிப்ளெக்டர்) பொருத்தப்பட்ட இரும்பு தகடுகள் அமைக்கும் பணி நடந்தது.
10 / 11
சத்துணவு காலி பணியிடங்களுக்கு, நேர்மையான முறையில் பணி நியமனம் செய்ய, மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை தொடர்ந்து நேர்முகத்தேர்வில் பங்கேற்க வசதியாக, விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சவுக்கு மர தடுப்பு.
11 / 11
தானே புயல் மற்றும் மீன்பிடி தடைக்காலம் ஆகியவை காரணமாக கடந்த 5 மாதங்களாக கடலுக்குச்செல்லாமல் இருந்த புதுச்சேரி மீனவர்கள் கடந்த 20 நாட்களாக தொழிலுக்குச் செல்கின்றனர்.தற்போது அவர்கள் வலைகளில் டன் கணக்கில் மீன்கள் கிடைக்கின்றன. நேற்று உப்பளம் துறைமுகத்தில் மீனவர் வலையில் சிக்கிய 75 கிலோ எடை கொண்ட மயில்கோலா மீன்.
Advertisement