பொதுஆல்பம்:

24-Nov-2012
1 / 10
சத்ய சாய்பாபாவின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ஆர்.ஏ.புரம், சுந்தரத்தில் இருந்து சூரிய பிரபையில் அலங்காரத்துடன் புறப்பட்ட பாபா, வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
2 / 10
தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு,பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவில் சிறந்த, பத்திரிகை புகைப்பட கலைஞராக தேர்வு செய்யப்பட்ட, சென்னை ளதி டைம்ஸ் ஆப் இந்தியா வின் தலைமை புகைப்பட கலைஞர் லட்டூர் ரத்தினம் சங்கருக்கு, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, வெங்கடாசலையா, விருது வழங்கினார். மத்திய அமைச்சர் மனீஷ் திவாரி,இந்தியாவிற்கான ஜெர்மன் தூதர் மைக்கல் ஸ்டெய்னர்.
3 / 10
மிஸ் இந்தியா 2013 அழகி போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் உள்ள அழகிகள் திறமை கண்டறியும் போட்டி நடந்தது. இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பெண்கள்.
4 / 10
ஊட்டி மத்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு மைய வளாகத்தில், நிலச்சரிவை தடுக்கும் வகையில்,"சணல் வலை' அமைக்கப்பட்டு, ஆய்வு நடந்து வருகிறது.
5 / 10
சென்னை சாஸ்திரிநகர் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகிய கடலில் கரைதட்டி பின் மீட்டு கடலுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரதீபா காவேரி கப்பலின் மேலாண் இயக்குனர் மற்றும் முன்னாள் கேப்டன் அவினாஸ் மோகன் ஆகியோர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தனர். அருகில் கப்பல் நிறுவன வழக்கறிஞர் ரவி.
6 / 10
திண்டுக்கல் குடகனாறு சுற்றுலா பங்களா மரத்தில், கூட்டமாக தொங்கும் பழந்தின்னி வெளவால்கள்.
7 / 10
எதிரிகளின் ஏவுகணைகளை, இடைமறித்து தாக்கும் சக்தி பெற்ற, இந்தியாவின் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை, ஒடிசாவின் வீலர்ஸ் தீவில் இருந்து நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது
8 / 10
கோவை வ.உ.சி., உயிரியல் பூங்காவில், விலங்குகளின் சிறப்பு மற்றும் செயல்பாடு குறித்து, பள்ளி மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் நேற்று அளிக்கப்பட்டது. முதலைகுட்டியை ஆர்வமுடன் பார்க்கும் குட்டீஸ்.
9 / 10
இயற்கைக்கு சல்யூட்:உடுமலை அருகே திருமூர்த்திமலையில், நெடியதாய் வளர்ந்து, மண்ணுக்கு நிழல் போர்வைதரும் மரங்கள், தென்றல் காற்றால் சுற்றுலா பயணிகளை தாலாட்டவும் தவறுவதில்லை.
10 / 10
லட்சக்கணக்கான பயணிகளை நாள்தோறும் சுமந்து, ஆயிரக்கணக்கான கி.மீ., பயணிக்கும் ரயில் பெட்டி, தனது பயணத்தை லாரியில் இருந்து துவக்குகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட ரயில் பெட்டி, அவிநாசி அருகே புதிய திருப்பூர் பகுதியில் கன்டெய்னர் எடுத்துச் செல்லும் லாரியில் பயணித்தது.
Advertisement