பொதுஆல்பம்:

25-Nov-2012
1 / 10
கடலூர், கூத்தப்பாக்கம் சத்ய சாய் சேவா சமிதியில் சாய்பாபாவின் 87வது பிறந்த நாள் விழா நடந்தது.
2 / 10
யாருக்கு தான் ஆசை வராது... வறண்ட குளம், காய்ந்த புற்கள் என கடந்த சில மாதங்களாக வறட்சியையே பார்த்து வந்த இந்த ஆடுகளுக்கு, வடகிழக்கு பருவ மழையின் வரப்பிரசாதமாய் குளம் நிறைய வாய்த்த தண்ணீரை பார்த்தால் துள்ளி குதிக்க ஆசை வராதா என்ன? இடம்: தேனி மாவட்டம் குன்னூர் கருங்குளம் கண்மாய்.
3 / 10
கள்ளிப்பட்டி பகுதியில் நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில், வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
4 / 10
திருத்தணியில் நடந்த ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்க நீண்ட வரிசையில் காத்திருந்த பிளஸ் 2 மாணவியர்.
5 / 10
கடலூரில் நடந்த கொழு கொழு குழந்தைகளுக்கான போட்டியில் வென்ற குழந்தைகளுக்கு அமைச்சர் சம்பத் பரிசு வழங்கினார். அருகில் எம்.எல்.ஏ.,க்கள் செல்வி ராமஜெயம், முருகுமாறன், சப் கலெக்டர் லலிதா, கடலூர் நகரமன்ற சேர்மன் சுப்ரமணியன்.
6 / 10
மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமிற்கு நெல்லையில் இருந்து லாரிகளில் கிளம்பிய ஆறு யானைகளையும் கலெக்டர், அறநிலையத்துறையினர் வழியனுப்பி வைத்தனர்.
7 / 10
தென்மேற்கு பருவமழையால் நிரம்பி வழியும், கரூர் அமராவதி அப்பிப்பாளையம் அணை ரம்மியமாக காட்சியளிக்கிறது.
8 / 10
தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் இளந்தளிர் அமைப்பு சார்பில் குழந்தைகள் தின விழா, உலக பாரம்பரிய வார விழா நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடந்தது.
9 / 10
நளபாகம்: பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள், ரசித்து ருசிக்க, ஒவ்வொரு நாளும் "வெரைட்டி'யான உணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்காக பிரபல சமையல் கலைஞர் "செஃப்' தாமு, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று பள்ளி சமையலர்களுக்கு, "வெரைட்டி' உணவு தயாரிக்கும் முறைகள் குறித்து கற்றுத்தருகிறார். இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி, குழுமணி, திருச்சி.
10 / 10
ஒளி காட்டும் நல்வழி: திருக்கார்த்திகை தீப திருநாளையொட்டி, ஸ்ரீரங்கத்தில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ள அழகிய பாவை விளக்குகள்.
Advertisement