பொதுஆல்பம்:

04-Dec-2012
1 / 10
மின்னொளி அல்ல விண்ணின் ஒளி: தொடர் மின் தடை, தொடர்ந்து கொண்டே... இருப்பதால்., மின்னொளியை புறக்கணித்த மாணவன் கண்கள், விண்ணின் ஒளியின் உதவியால் தன் புத்தகப்படிப்பை துவக்குகிறார். இடம்: கோவை ஒண்டிப்புதூர்.
2 / 10
டில்லியில் நடைபெற்ற ஜிண்டால் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மற்றும் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர்ஜி கலந்துகொண்டார்.
3 / 10
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், மாற்றுத் திறனாளி குழந்தைகள் தங்கள் பெற்றோருடன், மூன்று சக்கர சைக்கிளில், ஊர்வலம் சென்றனர்.
4 / 10
கிரிக்கெட் முன்னாள் வீரர் மறைந்த பங்கஜ் ராய் குறித்த புத்தக வெளியீட்டு விழா கோல்கட்டாவில் நடந்தது. இந்திய வீரர் சச்சின்,முன்னாள் கேப்டன் கங்குலி மற்றும் கேப்டன் தோனி கலந்துகொண்டனர்.
5 / 10
இயற்கை உரம் பயன்படுத்தி விளையும் பயிர்களுக்கு, தமிழகத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. நீலகிரியில் காய்கறி, பழங்கள், பல மாவட்டங்களுக்குச் செல்வதால், அம்மாவட்டத்தில், இயற்கை உரத் தயாரிப்பு அதிகரித்துள்ளது. குன்னூர், சிம்ஸ் பூங்காவில், இயற்கை உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்.
6 / 10
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், கிடப்பில் போடப்பட்டிருந்த நடைமேம்பாலம் அமைக்கும் பணி, தற்போது விரைவாக நடந்து வருகிறது.
7 / 10
அடர்ந்த பசுமை வனத்தில், நிசப்தமான சூழலில், மெல்லிய இசையாய், வெண்பட்டாய் விழும் நீரருவியின் ஓசையை கேட்டாயோ! பாறைகளையே, படிகளாக மாற்றி "பாலாய்' கொட்டும் நீரை இருகரங்களில் அள்ளி பருகினால் இன்சுவையாய் இருக்குமே! இயற்கையின் அழகில் எல்லையில்லாத இன்பம் உண்டு. இடம்: கோவை குற்றாலம்.
8 / 10
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால்,நீர் தேக்க பரப்பு மண் மேடாக காணப்படுகிறது.
9 / 10
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான பிரசார துவக்க விழா, திருப்பூர் குமரன் கல்லூரியில் நேற்று நடந்தது. கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த, புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட மாணவியர்.
10 / 10
அசாம் மாநிலம் தேஜ்பூரில் நடைபெற்ற 4வது கிழக்கிந்திய ஆணழகன் போட்டியில், தங்களது உடற்கட்டை காட்டி அசத்திய வீரர்கள்.