பொதுஆல்பம்:

18-Dec-2012
1 / 10
சின்னசேலம் அருகே எலவடி கிராமத்தில் கோலியாஸ் மருந்து செடி பயிரிடப்பட்டு நன்கு வளர்ந்துள்ளது.
2 / 10
மும்பையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.
3 / 10
மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகை தீபிகா படுகோனே.
4 / 10
விஜயநகர் பஸ் நிலையம் பகுதியில் பேருந்தில் படியில் பயணம் செய்பவர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் போக்குவரத்து போலீசார் மைக் மற்றும் துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
5 / 10
மாநாடும், விருந்து உபசாரமும்...: மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் துவங்கியது. முதல்வர் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்தவர்களை உபசரிக்க தனியார் ஓட்டல்களிலிருந்து(தாஜ் ஓட்டலிலிருந்து) வரவழைக்கப்பட்ட அருஞ்சுவை விருந்து. அரசு ஏற்று நடத்தும் சுற்றுலாதுறையின் தமிழ்நாடு ஓட்டல்களுக்கு இந்து விருந்து ஏற்பாட்டு உத்தரவை வழங்கியிருந்தால் அரசுக்கு வருவாய்தானே...! அரசாங்க விழாவிலேயே அரசாங்க துறைக்கு வாய்பளிக்காமல் இப்படி தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கலாமா...?
6 / 10
கடலூர் சரவணபவ கூட்டுறவு அங்காடி வளாகத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் பணி நியமனத்திற்கான நேர்காணல் நடந்தது.
7 / 10
அவலூர்பேட்டை-தாயனூர் சாலையில் கழுதை பாலை விற்பதற்காக கழுதைகளை ஓட்டி செல்லும் வியாபாரிகள்.
8 / 10
சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள சமுதாய கூடத்தில் ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. வந்திருந்த ஆசிரியர்கள் அமர எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படாததால் ஆங்காங்கே தரையில் அமர்ந்திருந்தனர்.
9 / 10
தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு வழங்குவதற்காக ஏ.இ.ஓ., அலுவலகத்தில் மரக்கன்றுகள் தயாராக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
10 / 10
மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டும் போது, நந்தி சிலைக்கு மேல் 51 அடி உயரம் தண்ணீர் தேங்கி நிற்கும். தற்போது நீர்மட்டம், 43 அடியாக குறைந்ததால், நந்தி சிலை அருகே, ஓடை போல தண்ணீர் செல்கிறது.
Advertisement