பொதுஆல்பம்:

23-Dec-2012
1 / 10
மதுரை அருப்புக்கோட்டை ரோடு, சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், மாணவிக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் ஏ.கே.குமரகுரு பட்டம் வழங்கினார். இடமிருந்து, கல்லூரி செயலர் டாக்டர் எல்.ராமசுப்பு, நிர்வாக உறுப்பினர் ஆர்.லட்சுமிபதி, கல்லூரித் தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, முதல்வர் சண்முகம், இணைச் செயலர் எல்.ஆதிமூலம், தேர்வாணையர் புதியநாயகம்.
2 / 10
சபரிமலையில் வரும் 26-ம் தேதி நடைபெறும் மண்டலபூஜைக்காக ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்கஅங்கி பவனி சபரிமலை ரதத்தில் புறப்பட்டது.
3 / 10
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த வீரர்கள் "சத்திய பிரமாணம்' எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரிகேடியர் சுரேஷ்குமார், வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
4 / 10
சென்னை, எண்ணூர் துறைமுகத்தில், கடலை தூர்வாறும் "டிசிஐ டிரெட்ஜ்-19' கப்பல், நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
5 / 10
சேலம்: நீர்மட்டம் 32 அடியாக குறைந்ததால் வறண்டு கிடக்கும் மேட்டூர் அணை.
6 / 10
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மேகமூட்டத்துடன் கடும் குளிர் நிலவுகிறது. அதனையும் பொருட்படுத்தாமல், ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்.
7 / 10
தேனி மாவட்டம், மூணாறு அருகே இடமலைகுடியில், போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் மலைவாழ் மக்கள்.
8 / 10
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, மதுரை, வாடிப்பட்டி ஆரோக்கியமாதா ஆலயத்திற்கு, ரயில் பாதை வழியே, பாத யாத்திரை செல்லும் பக்தர்கள்.(இடம்: வடமதுரை).
9 / 10
திண்டுக்கல் மாவட்டம், பழநிமலைக்கோயில் இரண்டாம் ரோப்கார் அமைய உள்ள இடத்தை ரோப்கார் கமிட்டியினர் ஆய்வு செய்தனர்.
10 / 10
2014ல் கும்பாபிஷேகத்திற்காக தயாராகி வரும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில், மூன்றாம் பிரகாரம், வர்ணங்களால் கண்ணை கவரும் வகையில் ஜொலிக்கிறது.
Advertisement