பொதுஆல்பம்:

24-Dec-2012
1 / 9
உ..பி., மாநிலம் அலாகாபாத் நகரில் பாயும் கங்ககை நதி கரையில் நடைபெற்று வரும் கும்ப விழாவில் சாதுக்கள் பூஜைகளை நடத்துகின்றனர்
2 / 9
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் முதலாமாண்டு பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவருக்கு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பட்டம் வழங்கினார்.
3 / 9
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாந்தி நிகேதனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவந்த நோபல்பரிசு பெற்ற பொருளாதார மேதை அமெர்த்தியா சென்னை மாணவி ஒருவர் வரவேற்கிறார்
4 / 9
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற பழமையான விண்டேஜ் கார் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு கழித்தனர். இக்கண்காட்சியில் சுமார் 97 விண்டேஜ் கார்கள் கலந்து கொண்டன.
5 / 9
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இன்று அதிகாலை வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. நேற்று பகல்பத்து, பத்தாம் நாளை முன்னிட்டு, மூலஸ்தானத்திலிருந்து, மோகினி அலங்காரத்துடன் அர்ச்சனை மண்டபத்தில் பக்தர்களுக்கு சுவாமிகள் அருள்பாலித்தார்.
6 / 9
ஊட்டியில் நடைபெற்று வரும் தேயிலை விழாவில் இடம் பெற்ற உணவுகளில் தேநீரை கலந்து பயன்படுத்தும் செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.
7 / 9
ஊட்டி தாவரவியல் பூங்காவில் பனி காலத்தில் மட்டும் மலரும், மக்னோலியா மலர்கள் பெருமளவில் பூத்துள்ளதால், பார்வையாளர்கள் பரவசமடைகின்றனர்.
8 / 9
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீரங்கத்தில் அழகிய செயற்கை நீருற்று அமைக்கப்பட்டிருந்தது.
9 / 9
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையே வரும் 30ம் தேதி, சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறஉள்ள, ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, நேற்று துவங்கியது. இதில், டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில்காத்திருந்த ரசிகர் கூட்டம்.
Advertisement