பொதுஆல்பம்:

25-Dec-2012
1 / 10
சூரியன் எழும்போதும் மறையும்போதும் வெப்பத்தை பூமியில் கொட்டிக்கொண்டு செல்லும் என்பதற்கு எடுத்துக்காட்டு..,தண்ணீரில் வெப்பத்தகடை நுழைத்துக்கெண்டு மறைகிறது. இடம்: பெரியபட்டினம் ஊரணி, ராமநாதபுரம்.
2 / 10
உலகத் திருநாளான கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு, ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் பூண்டிருந்தனர்.
3 / 10
இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார்.
4 / 10
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள ருத்ராட்சை மரத்தில் காய்கள் தொங்குவதை காண்பித்து, சுற்றுலாபயணிகள் மத்தியில் அதன் சிறப்பை பூங்கா ஊழியர் விவரித்தார்.
5 / 10
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி புதுச்சேரியை சேர்ந்த அரசு பள்ளி நுண்கலை ஆசிரியர் சுந்தரராசு என்பவர் ஒரு சென்டி மீட்டர் கன சதுர அளவுள்ள மிக சிறிய குடிலையும், குழந்தை ஏசு,மாதா,சூசையப்பர்,தேவதை,கிறிஸ்துமஸ் தாத்தா ஆகியோர் உருவங்களை தனி தனி அரிசியிலும் செய்து அசத்தியுள்ளார். (பவர் லென்சில் தெரியும் குடில்).
6 / 10
வால்பாறையில் நிலவும் கடும் வறட்சியிலிருந்து தேயிலையை பாதுகாக்க தண்ணீர் தெளிப்பான் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இடம்: முடீஸ்- தோணிமுடி எஸ்டேட்
7 / 10
வைகுண்ட ஏகாதசியை யொட்டி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் உற்சவர் பூ அலங்காரத்துடன் பரமபத வாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்வைபவத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா.
8 / 10
கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகாகும்பமேளா விரைவில் துவங்க உள்ள நிலையில், அங்கு குழுமியிருக்கும் சாதுக்கள் தங்களது அன்றாடப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
9 / 10
தமிழகத்திற்கு, வெளிமாநிலங்களிலிருந்து சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்ட, 2,500 டன் நெல்மூடைகளை லாரிகளில் ஏற்றும் பணிநடந்தது.
10 / 10
தும்பிக்கையில் நம்பிக்கை...: முதுமலை புலிகள் காப்பகத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள குட்டியானை ரங்காவுடன், அதன் தோழி காவேரி நாள்தோறும் வந்து விளையாடி உற்சாகப்படுத்தி வருகிறது.
Advertisement