பொதுஆல்பம்:

26-Dec-2012
1 / 10
முதுமலை புலிகள் காப்பகத்தில் வெயிலின் தாக்கத்தை தணிக்க யானைகள் தும்பிக்கையால் சேற்று நீரை உடலில் தெளித்து கொள்கின்றன. உடல் முழுவதும் சேற்று நீர் படும் வகையில், படுத்து உருளும் யானை.
2 / 10
மேற்கு வங்கத்தின் சாந்தி நிகேதனில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பழங்குடியின பெண்கள்.
3 / 10
உத்திரபிரதேச மாநிலம் பரிதாபாத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று கையெழுத்திடும் பெண் போலீஸார்.
4 / 10
டில்லியில் நடைபெற்ற தனியார் விளம்பர நிகழ்ச்சியில் நடிகையும் யுனிசெப் அமைப்பின் நல்லெண தூதருமான பிரியங்கா சோப்ரா, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆகியோர் பங்கேற்றனர்.
5 / 10
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் சிதம்பரம் பகுதியிலிருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு கரும்பு வரத்து துவங்கியுள்ளது.இருபது கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பு தற்போது 200 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.விளைச்சல் அதிகமாக உள்ளதால் பண்டிகை நெருக்கத்தில் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
6 / 10
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவமனையில், பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
7 / 10
ஊட்டி தாவரவியல் பூங்காவில், மலர் நாற்றுகளை நடவு செய்யும் தொட்டிகளுக்கு மண் நிரப்பும் பணி துவங்கியது.
8 / 10
உடுமலை அருகே பெதப்பம்பட்டியில், பூத்து குலுங்கும் டேலியா பூக்கள் மனதிற்கு இதம் அளிக்கின்றன.
9 / 10
குடிமைப்பயிற்சி முகாம், ஜெயந்தி கல்வியியல் கல்லூரி சார்பில், திருப்பூர் கணபதிபாளையத்தில் நடந்து வருகிறது. அதில், கோலப்போட்டி நடந்தது; "தினமலர்' நாளிதழில் வெளிவந்த, கிறிஸ்துமஸ் சாண்டா கோலத்தை தத்ரூபமாக போட்ட பெண்.
10 / 10
தேசிய நுகர்வோர் உரிமை பாதுகாப்பு தினத்தையொட்டி கடலூரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
Advertisement