பொதுஆல்பம்:

27-Dec-2012
1 / 13
சுனாமிக்கு முதல் நாளில் பிறந்த ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள் சுனாமி நினைவு தினமான மெரீனாவிற்கு வந்து துள்ளி விளையாடினர்.
2 / 13
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் ஆர்க்காட் குப்ப மீனவர்கள் கடலில் பால் மற்றும் பூக்களை கொட்டி அஞ்சலி செலுத்தினர்.
3 / 13
பாட்னாவில் நடைபெற்ற மிஸ் பீகார் அழகி போட்டியில் முதலிடம் பிடித்த சஞ்சனா (நடுவில்), அடுத்த இரண்டு இடங்களை பிடித்த சிவாஞ்சலி (இடது), ஹர்ஷா.
4 / 13
ஐதராபாத்தில் கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் 5, 794 குச்சிபுடி நடன கலைஞர்கள் பங்கேற்ற மகாபிருந்தா நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
5 / 13
சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் இருந்து கொல்கொத்தா வரை செல்லும் "விவேக் ஜோதி - தொடர் ஓட்டக்குழுவினர் மாலை தாம்பரம் வந்தனர்.
6 / 13
கோவை வேளாண் பல்கலைக் கழகம் அறிமுகப்படுத்திய வேர்க்கடலை அறுவடை இயந்திரம், விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் சோதனை செய்யப்பட்டது.
7 / 13
பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் காக்கைகளிடம் சிக்கி காப்பாற்றப்பட்ட வெள்ளை நிற ஆந்தை.
8 / 13
திண்டிவனத்தில் சித்தாந்த சைவ நெறிச் சங்கம் சார்பில் நடந்த திருமுறை விழாவில் சிறுவர் சிறுமிகள் பன்னிரு திருமுறைகளை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
9 / 13
'ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே, சுற்றுலா பயணிகளின் மனம் கவரும், வாலிநோக்கம் கோடிமுனை கடற்கரையின் எழில்மிகு தோற்றம். '
10 / 13
'பழநிமலைக்கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு நாணயங்கள்.'
11 / 13
குன்னூரில் செண்டை மேளம் முழங்க, ஐயப்பன் தேர் பவனி கோலாகலமாக நடந்தது.
12 / 13
அழகை ரசிக்கலாமா..? வால்பாறையில் கார்த்திகை மாதம் கடுங்குளிர் நிலவும் நிலையில், கண்ணுக்கும், மண்ணுக்கும் குளிர்ச்சியூட்டும் "வாடாமல்லி பூ' சுற்றுலாப்பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இடம்:சின்கோனா.
13 / 13
பெருகும் விளைச்சல்: உடுமலை அருகே வல்லக்குண்டாபுரம் கிராமத்தில், சொட்டு நீர் பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பாகற்காய் செடிகளில், விளைச்சல் அதிகரித்துள்ளது.
Advertisement