பொதுஆல்பம்:

28-Dec-2012
1 / 10
கோவை இந்துஸ்தான் கலை கல்லூரி விசுவல் கம்யூனிக்கேஷன்துறை சார்பில், இயற்கை மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்கான புகைப்பட கண்காட்சி துவங்கியது. புகைப்படங்களை பார்வையிடும் மாணவியர்.
2 / 10
டில்லி கல்லூரி மாணவி பாலியியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நடைபெற்ற கண்டன போராட்டத்தில் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றிய மாடல் செர்லின் சோப்ரா.
3 / 10
இப்படியும் வேலி அமைக்கலாம்... வீட்டை சுற்றியோ அல்லது தோட்டத்தை சுற்றியோ காலி பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை, ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அதில் மண் கொட்டி சிறு செடி கொடிகளை வளர்த்து வேலி அமைப்பதுடன் சுற்றுச் சூழலையும் பாதுகாக்கலாம். இடம்:செங்குன்றம் அடுத்த சரத்கண்டிகை.
4 / 10
ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்களை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்.
5 / 10
பெங்களூருவில் இருந்து ஊட்டிக்கு வரும் மஞ்சள் நிற குடைமிளகாய்க்கு மக்கள் மத்தியில் கிராக்கி ஏற்பட்டுள்ளதால், இதன் விற்பனை அதிகரித்து வருகிறது.
6 / 10
தேனி மாவட்டம் கூடலூர் அருகே விரைவில் திறக்க உள்ள பென்னிக்குக் மணிமண்டபம்.
7 / 10
'சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளதால், மாட்டுப்பட்டி அணையில் நெடு நேரம் காத்திருந்து பயணிகள் படகு சவாரி செய்து வருகின்றனர்.'
8 / 10
உடுமலை அருகே அம்மாபட்டி ரோட்டோரத்தில், சிவப்பு மற்றும் ரோஸ் நிறத்தில் பூத்துக்குலுங்கும் காகிதப்பூக்கள் கண்களுக்கு விருந்து படைக்கின்றன.
9 / 10
மும்பையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர் அனுப் ஜகோடா, ஊர்மிளா கனேத்கர்.
10 / 10
மும்பையில் நடைபெற்ற பரத நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த ஹேமா மாலினி.
Advertisement