பொதுஆல்பம்:

29-Dec-2012
1 / 10
சென்னையில் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கவுரவ முனைவர் பட்டத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி அமைப்பின் இயக்குனர் ஜெனரல் சரஸ்வத்துக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். அருகில் எஸ்.ஆர்.எம். பல்கலை நிறுவனத் தலைவர் பச்சைமுத்து.
2 / 10
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த, சமஸ்கிருத விழாவில் கலைஞர்கள் பாரம்பரிய வாத்திய கருவிகளுடன் பங்கேற்றனர்.
3 / 10
ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா என்ற பெயரில், தனி மாநிலம் உருவாக்கக் கோரி, அம்மாநில மக்களில் ஒரு பிரிவினர், பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று, தலைநகர் டில்லி, ரெய்சினா ஹில் பகுதியில், போராட்டம் நடத்த, அவர்கள் முடிவு செய்திருந்தனர். போராட்டத்தின் போது, கலவரம் ஏற்படாமல் இருக்க, பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
4 / 10
காஷ்மீரின் ரம்பன் மாவட்டம் பனிஹாலில், மலையைக் குடைந்து ரயில் பாதை உருவாக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய சுரங்கப்பாதையான இதில், ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
5 / 10
இமாச்சலபிரதேசத்தில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. கேளாங் பகுதியில் ரோட்டில் பனிக்கட்டிகள் சூழ்ந்திருக்க, வாகனங்கள் பகலிலும் விளக்கை எரிய விட்டுச்செல்கின்றன.
6 / 10
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில், நடப்பட்ட பூச்செடிகள் பனியால் கருகாமல் இருக்க, நிழல் வலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
7 / 10
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி- மஞ்சளார் அணை பகுதியில் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ள செங்கரும்புகள்.
8 / 10
மதுரை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலக வளாகத்தில் கருகிய மாலையுடன் பென்னிகுக் சிலை.
9 / 10
வெளிமாவட்டங்களுக்கு விற்க மதுரைக்கு வந்துள்ள வாழைப்பழ தார்கள்.
10 / 10
சிவகங்கையில் வீட்டின் மொட்டை மாடியில் விளைந்துள்ள மெகா சர்க்கரை பூசணி.