பொதுஆல்பம்:

30-Dec-2012
1 / 10
சிதம்பரத்தில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாட்டு கண்காட்சியில் தினமலர் நாளிதழ் அரங்கில் கல்வி மலர் இணைய தளம் குறித்து மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் குறிப்பெடுத்தனர்.
2 / 10
இமாச்சல பிரதேசத்தின் மாண்டி பகுதியில், கடும் குளிரால், கம்ரூனக் ஏரி முழுவதும் உறைந்து காணப்படுகிறது.
3 / 10
டில்லியில், கொடூரமாக, ஆறு பேர் கும்பலால் கற்பழிக்கப் பட்ட, இளம் பெண், மேல் சிகிச்சைக்காக, சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று அதிகாலை இறந்தார். டில்லியில், நேற்று அவருக்கு மெழுகு வர்த்தி ஏற்றி, அஞ்சலி செலுத்திய கல்லூரி மாணவியர்.
4 / 10
வங்கக் கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளதால், சென்னையில் நேற்று, கனமழை பெய்தது. இடம்: சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே.
5 / 10
சேலம் ஏற்காட்டில் முதன்முறையாக நேற்று துவங்கிய இரண்டாம் பருவ குளிர்கால மலர் கண்காட்சியை கடும் பனி மூட்டத்துக்கு இடையே பார்வையிட்ட சுற்றுலாப் பயணிகள்.
6 / 10
சென்னை, பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழகம் சார்பில் நடந்த சிறப்பு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் விஞ்ஞானி சிவதானுபிள்ளை, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவ்ரங் கங்குலி.
7 / 10
போடி மெட்டில் கடும் பனி மூட்டம் உள்ளதால், பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டிற்குள்முடங்கியதால் அப்பகுதி வெறிச்சோடியது.
8 / 10
சிவகங்கையில் தயாரிக்கப்பட்ட மெகா சைஸ் காலண்டர்.
9 / 10
வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள பிளமிங்கோ பறவைகள் ராமேஸ்வரம் தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள கோதண்டா ராமர் கோயில் அருகே முகாமிட்டுள்ளன.
10 / 10
சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் மூணாறு, மாட்டுப்பட்டி அணையில் படகு சவாரி செய்ய நீண்ட நேரம் காத்திருந்தனர்.
Advertisement