பொதுஆல்பம்:

09-Jan-2013
1 / 10
வாரணாசியில் உள்ள மத்திய பல்கலை.யில் நடந்த நிகழ்ச்சியில் புத்தமதத்தினர் மத்தியில் பேசினார் திபெத் ‌தலைவர் தலாய்லாமா.
2 / 10
லண்டனில் இருந்து கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தியின் நினைவு பொருட்கள் ,மும்பை விமான நிலையம் வந்தன.அவற்றை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங் ஆகியோர் பார்வையிட்டனர்.
3 / 10
குஜராத் மாநிலம் வதோதராவில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா துவங்கியது. இதில் பல்வேறு வடிவமைப்பிலான பட்டங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன.
4 / 10
இந்தியா வந்திருந்த நேபாள் ராணுவ தளபதி ஷூம்ஷர் ஜூங் பகதூருக்கு பாராட்டு விழா டில்லியில் நடந்தது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி அன்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
5 / 10
குடியரசு தினவிழா நெருங்குவதையொட்டி, டில்லியில் சாஸ்த்ர சீமா பால் படையினர் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
6 / 10
கடலூரில், தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக குடோனில் பொங்கல் பண்டிகையையொட்டி இலவசமாக வழங்கப்படும் சர்க்கரையை பேக்கிங் செய்யும் பணி நடந்தது.
7 / 10
கவிழ்ந்தது கப்பல் அல்ல... வயிறும், பயிறுதான்...என்றபடி டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி தண்ணீர் கிடைக்காமல் காய்ந்த பயிற்களுடன் சென்னையில் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்..
8 / 10
கடலோர காவல் படையை சேர்ந்த ராஜ்கமல் கப்பல் ரோந்து பணியில் ஈடுபட உள்ளது. இதையொட்டி, நடந்த விழாவில், மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் துவக்கி வைத்தார்.
9 / 10
கோவை துடியலூர் அருகே பெயர்த்து எடுக்கப்பட்ட அசோகமரம் , அங்கிருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள கதிர்நாயக்கன்பாளையத்தில் நடப்பட்டது.
10 / 10
மலேசியா சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக, மலேசியா - இந்தியா சுற்றுலாதுறை அதிகாரிகள் மற்றும் முகவர்கள் சந்திப்பு, கிண்டியில் நடந்தது. மலேசிய பாரம்பரிய உடையணிந்த பெண்கள் முகவர்களை வரவேற்றனர்.
Advertisement