பொதுஆல்பம்:

10-Jan-2013
1 / 10
கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூரில் கரணைக் கிழங்கு அறுவடை செய்யும் பசயில் ஈடுபட்டுள்ள பெண்கள்.
2 / 10
மும்பையில் நடைபெற்ற பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் விருதுடன் உற்சாக போஸ் கொடுக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய்.
3 / 10
ஜொலிப்பு... கடலூர் அண்ணாபாலம் சிக்னல் அருகே நகராட்சி சார்பில் 5 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட செயற்கை நீரூற்று வண்ணமயமாக ஜொலிக்கிறது.
4 / 10
பொங்கல் பண்டிகைக்கு சில தினங்களே உள்ள நிலையில் கோயம்பேடு சந்தையில் கரும்பு வரத்து அதிகரித்து வருகிறது.நேற்றைய நிலவரப்படி 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பு 200 ரூபாய்க்கு விற்கப்பட்டன.பண்டிகை நெருக்கத்தில் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
5 / 10
மாமல்லபுரம் கிரியேட்டிவ் சிற்பக்கலைக்கூடத்தில், சர்வதேச பயிற்சி பட்டறையை, ஓவியர் ட்ராஸ்கி மருது துவக்கிவைத்தார். வெளிநாட்டினர் சிற்பம் செதுக்குகின்றனர்
6 / 10
அண்ணாமலை பல்கலைக்கழக தேசிய மாணவர் படை மற்றும் யூத் ரெட் கிராஸ் மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
7 / 10
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற மலபார் மகோள்சவம் நிகழ்ச்சியில் நடைபெற்ற மெகந்தி வைக்கும் போட்டியில் கலந்து கொண்ட பெண்கள்.
8 / 10
மும்பையில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஹிர்திக் ரோஷன், நடிகை வித்யா பாலன்.
9 / 10
ஆந்திர மாநிலம் குண்டூரில் பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் விதமாக மிளகாய் பொடி வழங்கப்பட்டது.
10 / 10
பொங்கல் இலவச பொருளில்,வெல்லத்திற்கு பதில் சர்க்கரை வழங்குவதால், அதை பேக்கிங் செய்யும் பசயில் ஈடுபட்டுள்ள மகளிர் குழுவினர். இடம்:விருதுநகர் மாவட்டம் சிவகாசி.
Advertisement