பொதுஆல்பம்:

19-Jan-2013
1 / 10

குடியரசு தின கொண்டாட்டம் (26-ம் தேதி )நெருங்கி வருவதையொட்டி டில்லியில் ராணுவத்தினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.



2 / 10

விவேகானந்தா 150-வது பிறந்த தினத்தை யொட்டி கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மேற்குவங்க கவர்னர் எம்.கே.நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



3 / 10

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஆனந்தநாக் மாவட்டத்தில் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன.



4 / 10

மூணாறு அருகே, சொக்கநாடு எஸ்டேட் பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டு,புல் வெளிகளில் படர்ந்திருந்தது.



5 / 10

இந்திய வீரர்கள் இருவர்,பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்டதை தொடர்ந்து, எல்லையில், பதட்ட நிலை நீடிக்கிறது. காஷ்மீர் மாநிலம் சிலிகோட்டில் உள்ள இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், கொட்டும் பனியில் தேசத்தை, எதிரிகளிடமிருந்து காக்கும் பணியில் நம் வீரர்கள்.



6 / 10

ராமேஸ்வரம் கோயில் ராமநாத சுவாமி சன்னதி முன்புள்ள படியின் மீது, பொருத்துவதற்காக தயாரிக்கப்படும் வெள்ளியிலான தகடு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள்.



7 / 10

பழநி மலைக்கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட ரூபாய் நோட்டுகள் எண்ணும் பணி நடந்தது.



8 / 10

நீரில்லா அணையும் காய்ந்த மரமும்... பருவ மழை பொய்த்துப் போனதால், அணைகளில் நீர்மட்டம் குறைந்து அதில் இருந்த மரங்களும் எலும்புக்கூடாக மாறிவிட்டது. இந்த காட்சி மனதை பதை பதைக்கச்செய்கிறது. இடம்:ஆழியாறு அணை.



9 / 10
சிவகங்கை மாவட்டம் கண்டிப்பட்டியில் நடந்த மஞ்சுவிரட்டை காண ஆர்வமுடன் கிராமங்களிலிருந்து புறப்பட்டு சென்ற கிராமத்து”குடிமகன்கள்வெற்றியூர்விலக்கில் உள்ள டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்க கடும் போட்டி காணப்பட்டது.


10 / 10

கப்பல் மோதியதில் பாம்பன் ரயில் பாலத்தில் சேதமடைந்த தூணை, அகற்ற, ”டிரில்' இயந்திரம் மூலம் துளையிட்ட ரயில்வே ஊழியர்கள்.



Advertisement