பொதுஆல்பம்:

20-Jan-2013
1 / 14
வெப் 2013 மகளிர் தொழில் முனைவோர் கண்காட்சி ஆவாரம்பாளையம் ராமகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் துவங்கியது.
2 / 14
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடைபெற்ற கோக் பரோக் தின கொண்டாட்டத்தில் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்ற பெண்கள்.
3 / 14
டில்லியில் குடியரசு தின கொண்டாட்டத்துக்கான ஒத்திகையில் ஈடுபட்ட பள்ளி மாணவிகள்.
4 / 14
ஆஸ்திரேலிய கடற்கரை கலாச்சார விழா, மெரீனா கடற்கரையில் நடந்தது. இதில், காலை யோகாசனம் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
5 / 14
மும்பையில் நடைபெற்ற தனியார் விளம்பரதாரர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை தீபிகா படுகோனே.
6 / 14
'ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாராக உள்ள வறட்சியைத் தாங்கும் அண்ணா-4 ரக நெல்பயிர்.'
7 / 14
சக்கரநாற்காலிகள் வேண்டாம்..! சக்கரங்களுடன் சுழல்வோம்..! போலியோ சொட்டுமருந்து நாளை தமிழகம் முழுவதும் வழங்கப்பட இருக்கிறது. இதனை நினைவுபடுத்தும் வகையில் நெல்லையில் மாணவர்கள் ஸ்கேட்டிங் மூலம் போலியோ விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
8 / 14
'காரைக்குடியில் தமிழர் பண்பாட்டு மையம் சார்பில் நடந்த பொங்கல் விழாவில், சர்வ மதத்தினரும் பொங்கல் வைத்து தமிழர் திருநாளை கொண்டாடினர்.'
9 / 14
மும்பை மராத்தான் போட்டிக்கான விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த எத்தியோப்பிய ஓட்டப்பந்தய வீரர் ஹய்லே கெப்ரலேசி மற்றும் நடிகை குல் பனாங்.
10 / 14
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலாவை அதிகரிப்பது தொடர்பான விழாவில் பாரம்பரிய உடைஅணிந்து நடனமாடிய பெண்கள்.
11 / 14
அலகாபாத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா விழாவில் பங்கேற்க வந்த வெளிநாட்டு பயணிகள்.
12 / 14
ஸ்ரீ சேஷத்ர சகடபுர,ஸ்ரீ வித்யா பீடாதீஸ்வர ஸ்ரீ ஜகத்குரு பதரி சங்கராச்சார்ய ஸ்ரீவித்யாஅபினவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மஹாஸ்வாமிகள் கோவை பொள்ளாச்சி ரோட்டிலுள்ள ஸ்ரீ மகாலட்சுமி மந்திர் கோவிலுக்கு விஜயம் செய்தார்.
13 / 14
மயிலம் பொறியியல் கல்லூரியில் நடந்துவரும், மாணவர்களுக்கான கூடுதல் தகுதி மேம்படுத்தும் பயிற்சி வகுப்பை கல்லூரி முதல்வர் செந்தில் பார்வையிட்டார். அருகில், வேலைவாய்ப்புத் துறை தலைவர் சதீஷ்குமார், துணைப் பேராசிரியர்கள் முகமது முகமட், பிரேம்சுந்தர்.
14 / 14
உ.பி. அலகாபாத்தில் நடைபெறும் மகாகும்பமேளாவையொட்டி மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணியில் முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement