பொதுஆல்பம்:

30-Jan-2013
1 / 15
"பேஷன் எக்லட் - 2013' நிகழ்ச்சி, திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நடந்தது. காஸ்ட்யூம் டிசைன் மற்றும் பேஷன் துறை இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவியர் வடிவமைத்து, தயாரித்த, பல்வேறு விதமான ஆடைகளை, முதலாமாண்டு மாணவியர் அணிந்து வந்தனர்.
2 / 15
மும்பையில் இயக்குனர் சுபாஷ் கைய்யின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்ற சுபாஷ் கைய், நடிகர் சத்ரூகன் சின்ஹா, நடிகை வித்யா பாலன்.
3 / 15
அலகாபாத்தில் நடைபெற்று வரும் மகாகும்பமேளாவில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண்.
4 / 15
டில்லியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற (வலமிருந்து) கோ இந்தியா அமைப்பின் தலைவர் அல்கா லம்பா, அசோசெம் பெண்கள் அமைப்பின் தலைவர் ஹர்பீன் அரோரா, ஆடை வடிவமைப்பாளர் ரீது பெரி.
5 / 15
பெங்களூரில் நடைபெற்ற பேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று ஒய்யாரமாக போஸ் கொடுத்த மாடல்.
6 / 15
'கன்னியாகுமரி - அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, தேவகோட்டையில் வரவேற்பு அளித்தனர். '
7 / 15
அலகாபாத் மகாகும்பமேளாவில் பங்கேற்க வந்த பூரி சங்கராச்சாரியர் சுவாமி நிஷ்சலானந்த சரஸ்வதி.
8 / 15
'ஆஹா...: பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற கப்பலை காண, பாம்பன் ரோடு பாலத்தில் குழுமிய ரஷ்ய சுற்றுலா பயணிகள்.
9 / 15
' மகாராஷ்டிர பக்தர்கள், ஞானேஸ்வரி பாராயண' புத்தகத்தை தலையில் வைத்து. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்தனர்.
10 / 15
சீசன் துவங்கியுள்ள நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் விதையில்லா திராட்சை பழங்களின் வரத்து அதிகரித்து வருகிறது.நாக்பூர், சோலாபூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படும் இப் பழங்கள் சில்லறை விலையில் கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.
11 / 15
சுவீடன் நாட்டு மாணவர்கள், ஊத்துக்கோட்டையில் போக்குவரத்து விதிகள் பற்றி, போக்குவரத்து போலீசார் ஒருவரிடம் கேட்டு அறிந்தனர்.
12 / 15
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், மாணவியருக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
13 / 15
இதை பாடாத கவிஞன் இல்லை. புதுக்கவிஞனின் எழுத்துக்களுக்கு பிடித்த வாசமுல்லை. காதில் ரகசியம்... தேன் இதற்கு அவசியம். பார்க்கும் போது நமக்கும் வைக்கிறது வசியம். இடம்:உடுமலை.
14 / 15
பசுமை நிழலில் காதல் மோகம் : பூத்துக் குலுங்கும் பூக்களுக்கு மத்தியில், பசுமை மரக்கிளையில் அமர்ந்து காதல் மொழிப்பேசும் இந்த பறவைகளின் பார்வை கோவை அழகை ரசிக்கிறதா ? இல்லை மழை பொழிவை எதிர்பார்க்கிறதா ? இடம்: பீளமேடு, விமான நிலையம்.
15 / 15
பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் சாகசம் செய்த வீராங்கனைகள்.