பொதுஆல்பம்:

31-Jan-2013
1 / 15
உடுமலை கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு பள்ளியில், நடந்த ஆண்டு விழாவில், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது.
2 / 15
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்ட நியூசிலாந்து வீராங்கனைகள்.
3 / 15
விஸ்வரூபம் பட பிரச்சனை பற்றி கமலஹசன் பத்திரிக்கையளர்களை சந்தித்தார்.
4 / 15
5வது காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு சுநடை நோய்க்குத் தடை என்ற விழப்புணர்வு பதாகைகளுடன் மொட்டையடித்துக் கொண்டு காந்தியை போல் வேடமிட்டு ஊர்வலமாக வந்த ஆயிரம் சிறுவர்கள். இடம் - மெரினா கடற்கரை.
5 / 15
மும்பையில் நடிகை பிரியங்கா சோப்ரா 'இன் மை சிட்டி' என்ற பெயரில் இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். நிகழ்ச்சியின் போது போட்டோகிராபர்களுக்கு உற்சாக போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா.
6 / 15
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகத்துக்காக கட்டப்பட்ட கட்டடத்தில் பன்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனை கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. அதன் துவக்கமாக புறநோயளிகளை சோதனை செய்து பரிந்துரைப்பிரிவில் மருந்துகள் வழங்கும் நிகழ்வினை துவக்கியுள்ளனர்.
7 / 15
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஷர்மிளா தாகூருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கிய நடிகை ஹேமா மாலினி.
8 / 15
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் தால் ஏரியின் ரம்மியமான காட்சி.
9 / 15
திருநெல்வேலியில், விஸ்வரூபம் திரையிடப்படும் தியேட்டர் முன்பாக ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
10 / 15
ஆண்,பெண் வேறுபாடின்மை, ஒருவருக்கொருவர் மரியாதை மற்றும் உலக அமைதியை வலியுறுத்தி தரமணியில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் செவிலியர் கல்லூரியில் இருந்து காந்தி மண்டபம் வரை கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளின் பேரணி நடந்தது.
11 / 15
வடலூர் வள்ளலார் குருகுலம் பள்ளியில் நடந்த தைப்பூச விழாவில் தஞ்சை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் பேசினார்.
12 / 15
சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு வயலில் சாம்பார் வெங்காய அறுவடையில் ஈடுபட்டுள்ள பெண்கள்.
13 / 15
பண்ருட்டி அடுத்த பூண்டிகுச்சிப்பாளையம் பகுதியில் பச்சைபசேலென விளைந்துள்ள முட்டைகோஸ்.
14 / 15
மகாத்மாகாந்தி நினைவு நாளை தியாகிகள் தினமாக அறிவிக்கப்பட்டதால், காலை 11 மணியளவிலிருந்து 2 நிமிடம், வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. இடம் : வடகோவை
15 / 15
பரமக்குடி பஸ் ஸ்டாண்டில், நகராட்சியினரால் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை இருந்தும், உள்ளே நுழைந்து சரக்குகளை இறக்கும் லாரி, வேன்கள்.