பொதுஆல்பம்:

31-Jan-2013
1 / 12
புல்லட் புறா : திருச்சியில் இருந்து, பாம்பனுக்கு நான்கு மணி நேரத்தில், கடந்து வந்த புறா, உரிமையாளர் சுல்தான் தோளில் கம்பீரமாக நின்றிருந்தது.'
2 / 12
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக, மும்பையில் நடந்த பெண்கள் கிரிக்கெட் போட்டியில், சதம் அடித்த, சென்னையை சேர்ந்த, இந்திய அணி வீராங்கனை, திருஷ் காமினி முருகேசன்.
3 / 12
வரும் கோடை சீசனை முன்னிட்டு, ஊட்டி ரோஜா பூங்காவில், ரோஜா செடிகள் கவாத்து செய்யும் பணி துவங்கியுள்ளது.
4 / 12
அரியானா மாநிலம் பரிதாபாத்தில் இந்திய கலை மற்றும் கைவினை விழா நடக்கிறது. விழாவில் பங்கேற்ற கர்நாடக மாநில கலைஞர்கள்.
5 / 12
விஸ்வரூபம் படம் பிரச்சனையில் கமலுக்கு ஆதரவு தெரிவித்து ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டிற்கு வந்த சிவக்குமார்,பிரபு உள்ளிட்ட நடிகர்கள்.
6 / 12
இந்தியாவில் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி, ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பயிற்சியில் ஈடுபட்டது.
7 / 12
அரியானா மாநிலம் குர்கானில் நடைபெற்ற பானையை தலையில் வைத்து ஓடும் மத்கா போட்டியில் பங்கேற்ற இளம் பெண்கள்.
8 / 12
மும்பையில் விஸ்வரூபம் படம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் கமல். அருகில் நடிகை பூஜா குமார்.
9 / 12
கூடலூர் பகுதியில் காலை நேரத்தில் காணப்படும் பனி மூட்டத்தின் ரம்மியம்.
10 / 12
குனியமுத்தூர் அருகேயுள்ள நேரு விமானவியல் கல்லூரியில், "ஏரோபிளஸ் 2013' எனும், விமான கண்காட்சி துவங்கியது. கண்காட்சியில் இடம்பெற்றுள்ள விமானங்களை ஆர்வமுடன் பார்வையிடும் மாணவியர்.
11 / 12
திருவையாறில் சற்குரு தியாகராஜர், 166வது ஆராதனை விழாவின், முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனையை, ஒரே மேடையில் அமர்ந்து, அனைத்து இசை கலைஞர்களும் பாடி இசையஞ்சலி செலுத்தினர்.
12 / 12
மகா கும்பமேளாவை முன்னிட்டு, உ.பி., மாநிலம், அலகாபாத் திரிவேணி சங்கமத்தில், சிறப்புயாகத்தில் ஈடுபட்டுள்ள, வெளிநாட்டு சாதுக்கள்.
Advertisement