பொதுஆல்பம்:

07-Feb-2013
1 / 16
எம்.ஜி.ஆரின் 96வது பிறநந்தநாளை முன்னிட்டு டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி பெண்கள் கல்லூரியில் 60 மாணவிகள் பங்கேற்ற பாரதியாரின் பெண்மையை மையப்படுத்தி "ஆடுவோமே பள்ளு பாடுவோமே'நவீன நாட்டிய நாடகம் நடைபெற்றது.
2 / 16
துணிவே துணை! டில்லியில் பஸ்சில் மருத்துவ மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவியருக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கோவை, அல்@வனியா பள்ளியில் பயிற்சி பெறும் மாணவியர்.
3 / 16
பெங்களூரு எலஹங்கா விமானப்படை நிலையத்தில் துவங்கிய "ஏரோ இந்தியா 2013' விமான சாகசம் மற்றும் கண்காட்சியில் சாகசம் செய்து காட்டிய செக் குடியரசு சாட்டின் "ரெட் புள்' விமானங்கள்.
4 / 16
டில்லியில் நடைபெற்ற தனியார் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மிஸ் இந்தியா வேர்ல்டு 2012 வன்யா மிஸ்ரா.
5 / 16
இமாச்சல் பிரதோ மாநிலம் சிம்லாவில், கடும் பனிப் பொழிவு நிகழ்கிறது. சரித்திர புகழ்பெற்ற, ”ரிட்ஜ் சாலையில், பனிப் பொழிவை, மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும், சுற்றுலாப் பயணிகள்
6 / 16
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பலத்த மழை பெய்ததால் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன.
7 / 16
அரியானா மாநிலம் சூரஜ்குன்ட் பகுதியில் சர்வதேச கலை மற்றும் கைவினை பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியின் நடனமாடிய கஜகஸ்தான் கலைஞர்கள்.
8 / 16
தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி கலை பண்பாட்டுத்துறை சார்பில் இரண்டு நாட்கள் தமிழ் இசை விழா நடத்தப்படுகிறது. விழாவின் முதல் நாளான மங்கள இசை நடந்தது.
9 / 16
'பாம்பன் ரோடு பாலத்தில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக, நகரும் இரும்பு சாரம் அமைக்கப்பட்டுள்ளது.'
10 / 16
பாராட்டு விழா: சி.ஏ., தேர்வில் சாதனை படைத்த பிரேமாவை பாராட்டி, விழுப்புரம் மாவட்டம் பெரிய கொள்ளியூர் பொதுமக்கள் பராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். அதையொட்டி சங்கராபுரத்தில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்.
11 / 16
'சிவகங்கை, இலுப்பக்குடியில் இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த போலீசார் விடை பெற்று செல்லும் விழாவில்,சந்தோஷமாக ஆடினர். '
12 / 16
திண்டிவனம் அடுத்த சிங்கனூரில் விவசாயி பயிர்செய்துள்ள கோஸ்.
13 / 16
கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை மாணவர்களுக்கான சிறப்பு வணிகம் மற்றும் வங்கி சார்ந்த விழிப்புணர்வு கண்காட்சி கல்லூரி அரங்கில் நடந்தது
14 / 16
கூடலூர் பாண்டியார் அரசு தேயிலை தோட்ட குடியிருப்பு அருகே காலை "ஹாயாக' உலா வந்த காட்டு யானைகள்.
15 / 16
புதிய குடிநீர் திட்டத்துக்காக ஆலோசிக்கப்பட்டுள்ள, தேவாலா மூச்சிக்குன்னு பகுதி அருவியின் ரம்மிய காட்சி.
16 / 16
கிழக்கே குளித்து எழுந்த வானின் நெற்றித் திலகம், வீட்டு ஜன்னல் கம்பிகளுக்கு தங்க முலாம் பூசி, இயற்கைகோடு இணைந்து பேசி, முகாரி பாட தயாராகி விட்டது மேற்கே. சந் திரனின் உதயத்துக்கு, இதோ பிறந்தது வழி. இடம்: பொள்ளாச்சி குள்ளக்காபாளையம்.
Advertisement