பொதுஆல்பம்:

08-Feb-2013
1 / 18
தமிழக அரசின் தடை நீக்கப்பட்டதையடுத்து நடிகர் கமலின் 'விஸ்வரூபம்' திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது. சென்னையில் கமலின் 'கட் அவுட்'டுக்கு பால் அபிஷேகம் செய்யும் ரசிகர்கள்.
2 / 18
உத்தரபிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் மகாகும்பமேளாவை முன்னிட்டு சிவ பெருமானை தரிசிக்கும் பக்தர்கள்.
3 / 18
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடைபெற்ற விவசாய உணவு திருவிழாவில் மான் போல் துள்ளி குதித்து நடனமாடி பார்வையாளர்களின் பாராட்டுக்களை பெற்ற கலைஞர்கள்.
4 / 18
அரியானா மாநிலம் சூரஜ்குன்டில் நடைபெற்று வரும் சர்வதேச கலை மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சியில் நடனமாடிய இலங்கை கலைஞர்கள்.
5 / 18
அலகாபாத் மகாகும்பமேளாவில் நடைபெற்ற விஸ்வ இந்து பரிஷத்தின் தர்ம சன்சத் கூட்டத்தில் கலந்து கொண்ட காஞ்சி சங்கராச்சாரியர் ஜெயந்திர சரஸ்வதி மற்றும் சாதுக்கள்.
6 / 18
பெங்களூரு எலகங்கா விமான தளத்தில் நடைபெற்றும் ஏரோ இந்தியா கண்காட்சியில் பங்கேற்ற வெளிநாட்டினர்.
7 / 18
சென்னையில் இருந்து, புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலையில், ஏ.டி.ஜி.பி., சைலோந்திரபாபு தலைமையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.இடம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்
8 / 18
ராமேஸ்வரம் தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோயில் அருகே தேங்கி நிற்கும் நீரில், குளிர் கால சீசனை அனுபவிக்க, ஆஸ்திரேலியாவில் இருந்து குவிந்துள்ள பிளமிங்கோ பறவைகள்.
9 / 18
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்ற பாலிவுட் இயக்குனர் ரெமோ டிசவ்சா, நடிகை நூரின் ஷா.
10 / 18
மும்பையில் நடைபெற்ற சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று போஸ் கொடுத்த நடிகை மலாய்கா அரோரா.
11 / 18
உ.பி., அலகாபாத்தில் கும்பமேளாவை முன்னிட்டு கங்கை கரையில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களுக்கு மத்தியில் கொசு மருந்து அடித்து கொண்டு செல்லும் வாகனம்.
12 / 18
கொடைக்கானலில் பெய்த பலத்த மழை காரணமாக, வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
13 / 18
சென்னை தி.நகரில் உள்ள பத்மஷேசாத்ரி பாலபவன் பள்ளியில் கல்வி கண்காட்சி துவங்கியது. இதில், மாணவர்கள் தயாரித்த ரோபோவை பார்த்து வியக்கும் பெற்றோர்கள்.
14 / 18
பவித்ரம் தொண்டு நிறுவனம் சார்பில், சென்னை அரசு பள்ளி மாணவர்கள், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சந்திப்பு நிகழ்ச்சி, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடந்தது. விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசிய அப்துல் கலாம்.
15 / 18
கூடலூர் ஜீன்பூல் தாவர மையத்தில் பூத்துள்ள "டென்ரோபியம்'ஆர்கிட் மலர்கள்.
16 / 18
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில், வணிகவியல் துறை மற்றும் நுகர்வோர் சங்கம் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது; பங்கேற்ற பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்.
17 / 18
பொள்ளாச்சியை அடுத்த எரிசனம்பட்டி கிராமத்தில், சென்னை ஐகோர்ட் அனுமதியின் பேரில் முன்தினம் சேவல் சண்டை நடந்தது. சண்டைக்கு தயாராகும் சேவல்கள்.
18 / 18
பெங்களூரு, எலஹங்கா விமானப்படை தளத்தில் நடந்து வரும், "ஏரோ இந்தியா - 2013' சர்வதேச விமான கண்காட்சியில், சாகசத்தில் ஈடுபட்ட, இந்திய தயாரிப்பான, "தேஜஸ்' போர் விமானம்.
Advertisement